நீங்களும் மென்பொருள் பொறியியலாளராக மாற முடியும்…
உயர்தர சித்தியுடன் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியல் இளங்கலை மானி பட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆனது பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் ஆகும்..
தகவல் தொழில்நுட்ப துறையில் 2025 இல் பத்தாயிரம் பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்தில் முதல்படியாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மூலம் குறித்த கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேவையான தகைமைகள்
உயர்தரத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பிரதானமான மூன்று பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் போதுமானது.
அல்லது இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் ஏதேனும் advanced certified programme
அல்லது cambridge/Edexcel உயர்தரப் பரீட்சையில் c சித்தி
கற்கைநெறி காலம்- 4 வருடம்
குறித்த கற்கை நெறியில் உங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் தொடர முடியும்..
விண்ணப்ப முடிவுத் திகதி-25.09.2021
எவ்வாறு விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்..விண்ணப்பிக்க கீழே உள்ள apply online க்ளிக் செய்யவும்
குறித்த கற்கை நெறியை பயில்வதற்கு அறவிடப்படும் கட்டணம் பின்வருமாறு..
Application Fee Rs. 600.00 |
Registration Fee Rs. 600.00 |
Facilities Fee Rs. 1,500.00 |
Library facilities Rs. 200.00 |
Request for exemptions Rs. 60 / credit |
Start@OUSL (Compulsory) Rs. 5,500.00 |
Course fees – Rs. 3000 per credit.
(In an year a student may take upto 32 – 33 credits and to graduate a student must pass 130 credits)