FUEL LOCATION WEBSITE FULL DETAILS
NEW UPDATE – சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த இணையதளம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது
உங்கள் பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பதனை அறிந்து கொள்வதற்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும்..
காலை 9 மணிக்கு எரிபொருள் இருப்பு மற்றும் பிற தகவல்கள் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்..பின்னர் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் தகவல்கள் புதுபிக்கப்படும்..
குறித்த இணைய தளத்தில் எவ்வாறு குறித்த தகவல்களை பார்வையிடுவது என்பது கீழே படிமுறைகள் ஆக கொடுக்கப்பட்டுள்ளது..
லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன் கீழ்வருமாறு ஒரு பக்கம் உங்களுக்கு தோன்றும்.

பக்கத்தில் உங்கள் மாகாணம் மாவட்டம் மற்றும் ஊர் என்பவற்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்..
கீழேஉள்ள ஆங்கில எழுத்துக்கள் பின்வருவனவற்றை குறிப்பிடுகின்றன..
- P92- 92 ரக பெட்ரோல்
- D- டீசல்
- SD- சூப்பர் டீசல்
- K- kerosine (மண்ணெண்ணெய்)
நீங்கள் 92 ரக பெட்ரோல் தொடர்பான விவரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் p92 என்பதை தெரிவு செய்தபின்னர் இறுதியாக search என்பதை கிளிக் செய்யுங்கள்..