2020 சாதாரண தர பரீட்சைக்கு உரிய பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தன..குறித்த பெறுபேறுகளை மீள் ஆய்வுக்கு உட்படுத்துவது கான ஆன்லைன் மூலமான விண்ணப்பங்கள் கோரபபட்டுள்ளன..
இதற்கு விண்ணப்பிக்க ஒரு பாடத்திற்கு ரூபாய் 200 வீதம் செலுத்தப்பட வேண்டும்.. இதனை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் கந்தோர் மூலமாகவோ செலுத்த முடியும்..
எவ்வாறு இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தமிழ் மொழியில் ஒவ்வொரு படிமுறையாக படங்களுடன் கொடுத்துள்ளோம்.. அதனை முழுமையாக வாசித்து தெளிவு பெற்ற பின்னர் விண்ணப்பிக்க முயற்சி செய்யுங்கள்..
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து பரீட்சை திணைக்களத்தின் பக்கத்திற்குள் நுழையுங்கள்..
1.இங்கு நீங்கள் ஏற்கனவே உங்கள் கணக்கை திறந்து வைத்து இருந்தாள் நேரடியாக உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்தே login செய்ய முடியும்..அவ்வாறு இல்லாமல் நீங்கள் புதிய நபராக இருந்தால் register என்பதை கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்..
2.பதிவு செய்யும்போது கேட்கப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு otp இலக்கம் அனுப்பப்படும்..Otp இலக்கத்தை சரியாக கொடுத்தவுடன் உங்களால் பரீட்சைகள் திணைக்களத்தின் விண்ணப்ப பக்கத்திற்குள் நுழைய முடியும்..
3.நீங்கள் ஏற்கனவே கொடுத்த தேசிய அடையாள அட்டை இலக்கம் பரீட்சை எழுதிய நபர் உடையதாக இருந்தால் தானாகவே அனைத்து பரீட்சை தொடர்பான விபரங்களையும் உங்களுக்கு காட்சிப்படுத்தும்..வேறு ஒரு நபர் உடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து பதிவு செய்திருந்தால் உங்களிடம் index no கேட்கப்படும்.
4.அதனை கொடுத்த உடன் முழு விபரங்களும் காட்சிப்படுத்தப்படும்..பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான ஒரு அட்டவணை காட்டப்படும்.. அதில் எந்த எந்த பாடங்களுக்கு நீங்கள் Recorrection போட விரும்புகின்றீர்களோ அதனை tick செய்து கொள்ள வேண்டும்..
பின்னர் submit request என்பதை கொடுகக்கவும்..
அடுத்ததாக திரையில் Recorrection போடப்பட்ட பாடங்கள், செலுத்த வேண்டிய கட்டணம்,உங்கள் விவரங்கள் காட்சிப்படுத்தப்படும்
அதுக்கு கீழே கட்டணம் செலுத்துவதற்கான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்..
1. ஆன்லைனில் காட் மூலமாக செலுத்துவது(DEBIT oR CREDIT CARD)
2. தபால் கந்தோர் மூலமாக செலுத்துவது(POSTAL DEPARTMENT)
டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் செலுத்த விரும்பினால் உங்கள் கார்ட் விபரங்களை கொடுத்து செலுத்த முடியும்..
அப்படி ஆன்லைன் மூலமாக செலுத்த முடியாதவர்கள் த்பால் கந்தோர் மூலம் செலுத்த விரும்பினால் அதனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு திரையில் ஒரு reference number ஒன்று தோன்றும்..
அதனை குறித்து வைத்துக்கொண்டு ok என்பதை கொடுங்கள் . பின்னர் தபால் கந்தோர் சென்று இலக்கத்தை கொடுத்து உங்கள் கட்டணத்தை செலுத்தி கொள்ளுங்கள்..
கட்டணத்தை செலுத்திய பின்னர் மீண்டும் உங்கள் account குள் நுழையும் போது உங்கள் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் காட்டப்படும்..
அதனை pdf வடிவில் டவுன்லோட் செய்து கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்..
நிரப்புவது தொடர்பான techical instruction ஐ pdf வடிவில் பெற்று கொள்ள விரும்பினால் இதனை கிளிக் செய்யவும்
.
வீடியோ வடிவில் விண்ணப்பிக்கும் முறையை பார்வையிட விரும்பினால் இதனை கிளிக் செய்யவும்