UPDATE ABOUT SCHOOL HOLIDAYS 2022 new update

UPDATE ABOUT SCHOOL HOLIDAYS

நிலுவையில் உள்ள அரச பாடசாலை பரீட்சைகளை கருத்திற் கொண்டு நவம்பர் இறுதி வரை விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர 2022 பரீட்சைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது.

தரம் 3 மாணவர்களுக்கான பாடசாலைகளை நடத்துவதற்கான தேவைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வரும் அதே வேளையில், தரம் 01 மற்றும் 02ஐ தினசரி கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலக்குவது குறித்தும் கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது.