Arunalu sittham childrens art competition 2023-COMMERCIAL BANK
அன்பான பிள்ளைகளே,
உங்கள் மனதில் தோன்றும் அழகான எண்ணங்களை ஓவியமாக வரைந்து அனுப்புங்கள். ‘அருணலு சித்திரம்” சிறுவர் சித்திரபோட்டி 2023 மூலம் அந்த ஓவியங்களுக்கு பரிசுகளைத் தர COMMERCIAL BANK தயாராக உள்ளது
போட்டி பிரிவு மற்றும் வயது எல்லைகள்
- போட்டி பிரிவு மற்றும் வயது எல்லைகள் (உள்நாட்டு/வெளிநாட்டு)
- முன் ஆரம்ப பள்ளிப் பிரிவு – வயது 04 – 05 (பிறந்த வருடம் 2018/2019)
- ஆரம்ப பள்ளிப் பிரிவு – வயது 06 – 07 (பிறந்த வருடம் 2016/2017)
- பின் ஆரம்ப பள்ளிப் பிரிவு – வயது 08 – 10 (பிறந்த வருடம் 2013/2014/2015)
- கனிஷ்ட பிரிவு – வயது 11 – 13 (பிறந்த வருடம் 2010/2011/2012)
- சிரேஷ்ட பிரிவு – வயது 14 – 16 (பிறந்த வருடம் 2007/2008/2009)
மேல் குறிப்பிட்ட போட்டிகளுக்காக தொடர்புடைய வருடங்களில் பிறந்த மாணவ, மாணவியர் ஆக்கங்களை அனுப்பலாம்.
பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்
உள்நாட்டு ஓவியங்களுக்கு முன் ஆரம்ப பள்ளிப் பிரிவில் 25 சிறப்பு ஆக்கங்களுக்காக ரூபாய் பத்தாயிரம் வீதம் (ரூ.10,000/-) பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் 50 திறமையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். ஏனைய அனைத்து போட்டிப் பிரிவுகளுக்கும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு முறையே ரூபாய் ஒரு லட்சம் (ரூ. 100,000/-), ரூபாய் எழுபத்தையாயிரம் (ரூ. 75,000/-), ரூபாய் ஐம்பதாயிரம் (ரூ.50,000/-) வீதம் பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறப்பு திறமைப் பரிசுகள் 25 இற்காக ரூபாய் பத்தாயிரம் (ரூ.10,000/-) வீதம் பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் திறமைப் பரிசுகள் 50 இற்காக சான்றிதழ்கள் வழங்கப்படும். வெளிநாட்டு ஓவியங்களுக்கு, அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் ஒரு வெற்றி ஓவியம் வீதம் தெரிவுசெய்யப்பட்டு ஐம்பதாயிரம் (ரூ.50,000/-) ரூபாய் பணப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். அனைத்து பணப் பரிசுகளும் கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.
தலைப்பு மற்றும் ஓவியம் வரைய பயன்படுத்தவேண்டிய கடதாசியின் அளவு
பிரிவு | கருப்பொருள் | கடதாசியின் அளவு |
---|---|---|
முன் ஆரம்ப பள்ளிப் பிரிவு | தாம் விரும்பிய தலைப்பு | A3 |
ஆரம்ப பள்ளிப் பிரிவு | தாம் விரும்பிய தலைப்பு | A3 |
பின் ஆரம்ப பள்ளிப் பிரிவு | தாம் விரும்பிய தலைப்பு | A3 |
கனிஷ்ட பிரிவு | கடமையை செய்வோம் | 14அங் * 18அங் |
சிரேஷ்ட பிரிவு | பசுமை எண்ணக்கரு | 14அங் * 18அங் |
அனுப்ப வேண்டிய முறை
செப்டம்பர் 30 வரையான காலப்பகுதிக்குள்; www.arunalusiththam.lk வலைத்தளத்திற்குள் பிரவேசித்து உங்களால் வரைந்து முடிக்கப்பட்ட சித்திரங்களின் ஸ்கேன் ((Scan) பிரதி மற்றும் அதன் விபரங்களை உள்ளடக்குவதன் மூலம் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஸ்கேன் செய்யப்பட்ட சித்திரங்கள் உள்ளடக்கப்படவேண்டியது JPEG மாதிரியில் என்பதுடன் அதன் அளவு மெகாபைட் 5 (5mb) இற்கு மேற்படக்கூடாது. வலைத்தளத்தில் உள்ள படிவத்தில் போட்டி பிரிவு, தலைப்பு, போட்டியாளரின் பெயர், ஆண்/பெண் பாலினம், போட்டியாளரின் பிறந்த தினம், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் (கையடக்க), தாய்/ தந்தை/பாதுகாவலரின் பெயர், பாடசாலை மற்றும் அதன் முகவரியை குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.
போட்டி நிபந்தனைகள்
- சித்திரப் போட்டிக்காக ஒருவருக்கு ஒரு சித்திரத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
- வெளிநாட்டுப் பிரிவில், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப் பிள்ளைகள் மட்டுமே சித்திரப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
- தாங்கள் விரும்பிய எந்தவொரு ஊடகத்தையும் பயன்படுத்த முடிவதுடன், ஒட்டும் தன்மையுள்ள, உலராத வர்ணங்களைப் பயன்படுத்தக்கூடாது.
- உள்நாட்டு ஓவியப் பிரிவில், போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் சித்திரம் இறுதிச் சுற்றுக்குத் தெரிவானால் அல்லது வெற்றி பெற்றால் நாம் கோரும்போது அந்த ஓவியமூலப் பிரதியை அதிபர்/உப அதிபர்/ சட்டத்தரணியொருவர்/கிராம உத்தியோகத்தர் போன்றவர்களுள் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
- வெளிநாட்டு ஓவியப் பிரிவில், அதிபர்/உப அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட ஓவிய மூலப் பிரதி எம்மால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கமைய எமக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- உங்களால் சமர்ப்பிக்கப்படும் ஓவியம் சுய ஆக்கமாக இருத்தல் வேண்டும். அத்துடன் அது வேறு போட்டிகளுக்கு சமர்ப்பிக்கப்படாத ஓவியமாக இருப்பதுடன், மீண்டும் வரைதல், மற்றவர்களுக்கு வழங்குதல் கூடாது.
- சித்திரப் போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களினதும் உரிமை கொமர்ஷல் வங்கிக்கு உரித்தாவதுடன், அவை மீள ஒப்படைக்கப்படமாட்டாது.
- சிரேஷ்ட நடுவர் குழுவொன்றின் ஊடாக வெற்றி பெறும் ஸ்தானங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ் பத்திரங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், நடுவர்களின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும்.
- இப்போட்டியில் கொமர்ஷல் வங்கியில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் பங்குபற்ற முடியாது.
அனைத்து பணப் பரிசுகளும் கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.
மேலதிக விபரங்களுக்கு 0112 353 353 க்கு அழைக்கவும்.
நீங்கள் ஆக்கங்களை வரைந்த பின்னர் online இல் அதனை சமர்ப்பிக்க வேண்டும். என்றால் .கீழே உள்ள சமர்ப்பியுங்கள் என்ற லிங்கை அழுத்தி உங்களால் ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்..