Government is focused on starting schools soon
பாடசாலைகளை ஆரம்பிக்கின்றமை குறித்து கொள்கை அளவிலான தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, பாலர் பாடசாலை உள்ளிட்ட தரம் ஒன்று முதல் தரம் 6 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கின்றமை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், பாடசாலைகளை ஆரம்பிக்கின்ற திகதி தொடர்பிலான தீர்மானம், சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடலை நடத்தி எட்டப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
இந்த தீர்மானம் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் எட்டப்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதன்படி, 200 மாணவர்களுக்கு குறைவான 5000 பாடசாலைகள் உள்ளதாகவும், முதற்கட்டமாக அந்த பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாடசாலைகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டிய பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சு தீர்மானிக்கும் எனவும் அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.