UPDATE ON HOLIDAY FOR SCHOOLS 2023-MAY

UPDATE ON HOLIDAY FOR SCHOOLS 2023

 பாடசாலைகளுக்கு இம்மாதம் விடுமுறை வழங்குவது குறித்த தீர்மானம் ஒன்றை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில். பாடசாலைகளுக்கு நாளை 13 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நிமித்தம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

பின்னர் மே மாதம் 25 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரையில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்களை இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதன்படி மே மாதம் 29ம் திகதி இந்த பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பாடசாலை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டன.

பரீட்சைகள் 29ம் திகதி ஆரம்பமாகின்ற நிலையில், பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் விடுமுறை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான பின்னணியில் பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்த முக்கியத் தீர்மானம் ஒனறு கல்வி அமைச்சினால் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இம்மாதம் 27ம் திகதி முதல் ஜுன் மாதம் 11ம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஏற்கனவே காலதாமதமாகியுள்ள கல்விப் பொதுத் தராதார சாதாரணத் தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி 29ம் திகதி நடைபெறுமா? என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகள் விடைத்தால் மதிப்பீட்டு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமமே இதற்கான காரணம்.

இதுகுறித்து ஏற்கனவே பதிலளித்துள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பரீட்சைகள் அரம்பமாகவும் என்று அறிவித்துள்ளார்.