Schools Opens 3 Days at week

Schools Opens 3 Days at week

கடந்த வாரம் பாடசாலைகள் நடத்தப்பட்டதைப் போலவே ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் 5ம் திகதி வரை பாடசாலைகளை நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சில் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.