All you need to know about the National Fuel Pass
NEW UPDATE(26.07.2022)
தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பின் கீழ் வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய எரிபொருள் விநியோக முறையின் கீழ் வாகனங்களுக்கு எரிசக்தி அமைச்சு வாரத்திற்கு எரிபொருள் ஒதுக்கீட்டை ஒதுக்கியுள்ளது.பல பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் தங்கள் தேசிய எரிபொருள் பாஸ் பயன்பாட்டில் காட்டப்படும் ஒதுக்கீட்டில் அதிகரிப்பு குறித்துப் புகாரளித்துள்ளனர்.வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:
கார்கள் – 20 லிட்டர்
முச்சக்கர வண்டிகள் – 05 லிட்டர்
மோட்டார் சைக்கிள்கள் – 04 லிட்டர்
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்தார்.
. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் லங்கா இந்தியன் ஆயில் கம்பனி (LIOC) ஆகியவற்றின் எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை நாளை பல பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில், இதற்கு மாற்றாக ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை கடைசி இலக்க எண் தகடு முறை அமலில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ட்விட்டரில், எரிசக்தி அமைச்சர் தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பு தொடர்பான 07 முக்கிய புதுப்பிப்புகளை வழங்கினார்.
1) CEYPETCO & LIOC இல் பல இடங்களில் ஜூலை 26 செவ்வாய்கிழமை முதல் நாடு முழுவதும் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு நடைமுறைப்படுத்தப்படும். இந்த அமைப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை எண் தகட்டின் கடைசி இலக்கத்துடன் நடைமுறையில் இருக்கும்.
தற்போது அறிமுகம் செய்யபட்டு உள்ள fuel pass system பற்றிய முக்கியமாக உங்களுக்கு தெரிந்து இருக்க முக்கியமான விடயங்கள் பின்வருமாறு
Note – இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை எனின் REGISTER என்பதை கிளிக் செய்து பதிவு செய்யவும்..
உங்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை எனின் இன்னும் ஒருவரின் ஸ்மார்ட்போனில் உங்கள் பதிவை மேற்கொள்ளுங்கள். அந்த QR code ஐ டவுன்லோட் செய்து தாளில் print எடுக்கவும்..அதனை பாஸ் ஆக பயன்படுத்த முடியும்..
உங்களுக்கு வாரத்துக்கு எவ்வளவு பெட்ரோல் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உங்கள் fuel pass கணக்கில் உள் நுழைந்து பார்க்க முடியும்..
QR code இணை பயன்படுத்தும் போது மட்டும் தொலைபேசியை வெளியில் எடுக்கவும்.. ஏனெனில் நீங்கள் இருக்கும் இடம் எரிபொருள் நிலையம் என்பதை மறந்து விடாதீர்கள்..முடிந்தவரை உங்கள் எரிபொருள் அட்டையை ஒரு தாளில் பிரதி எடுத்து வைத்துக் கொள்வது இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்..
1. அனைத்து தனிப்பட்ட வாகனங்களுக்கும் ஒவ்வொரு கிழமையும் உறுதிப்படுத்தப்பட்ட பெட்ரோல் அளவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது..
2. இந்த நடைமுறை Ceypetco மற்றும் IOC ஆகிய எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் செல்லுபடியாகும்..
3. உங்கள் வாகன இலக்கத்தின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெட்ரோல் பெற்றுக் கொள்வதற்கான தினங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- 0,1,2 – Tuesday & Saturday
- 3,4,5 – Thursday & Sunday
- 6,7,8,9 – Monday, Wednesday & Friday
4. பதிவு செய்து கொண்டவர்கள் அனைவருக்கும் உங்களுக்கான பெட்ரோல் quota தயார்படுத்தப்பட்டதும் உங்களுக்கு அறிவிக்கப்படும்..
8.ஒரு NIC அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது வியாபார பதிவு இலக்கத்தின் கீழ் ஒரு fuel pass மட்டுமே பெற்று கொள்ளலாம்..அதாவது ஒருவர் ஒரு வாகனத்தை மட்டுமே தனக்கு கீழ் பதிவு செய்து கொள்ள முடியும்…
உதாரணம் ஆக உங்கள் வீட்டில் மூன்று வாகனங்கள் இருந்தால் வீட்டில் உள்ள ஒருவரின் கீழ் மூன்று வாகனங்களையும் பதிவு செய்ய முடியாது.. வீட்டில் உள்ள மூன்று உறுப்பினர்களுக்கு கீழ் தனி தனியே பதிவு செய்ய முடியும்..