Foreign Jobs for Government Employees (Online Registration) 2022 – Sri Lanka Bureau of Foreign Employment
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்தல்..
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒன்றினை தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் பெற்றுக்கொள்ள பலர் முயற்சி செய்யும் நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதற்கான வாய்ப்பை அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது..
அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் தமது தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்து வைத்துக் கொள்வதன் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்..
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் நிரப்பும் படிவத்தில் முழுமையான தகவல்களை கொடுத்து பதிவு செய்வது எப்படி என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.. இதனை வாசித்து முழுமையான விளக்கத்தை பெற்றுக்கொண்ட பின்னர் லிங்கை பயன்படுத்தி உங்களால் இலகுவாக பதிவு செய்ய முடியும் .
1.இந்த லிங்கை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் பகுதியில் உங்களால் நுழைய முடியும்.. நுழைந்தவுடன் தோன்றும் திரையில் create new account என்பதை அழுத்தவும் –

2.அடுத்ததாக தோன்றும் திரையில் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் முதல் கொண்டு இமெயில் வரை கேட்கப்பட்டிருக்கும்.. அவற்றை முழுமையாக நிரப்பிக் கொள்ளவும்.. பின்னர் create பட்டன் ஐ அழுத்தவும்

பின்னர் கீழ்வருமாறு ஒரு திரை உங்களுக்கு தோன்றும்..உங்களை பதிவு செய்வதற்கு முதல் பட்டியில் கொடுக்கப்பட்டுள்ள slbfe registration என்பதை அழுத்தவும்..

அடுத்ததாக தோன்றும் பக்கத்தில் மூன்று விடயங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்..
1.read instructions, 2.checking qualification, 3.reupload documents

நிரப்புவதற்கு முன்னராக instructions ஐ வாசித்துக் கொள்ளுங்கள்.. அதில் நீங்கள் இதற்கு தகுதியானவரா என இது கொள்வதற்கு உதவியாக இருக்கும்.. தகுதியானவராக இருப்பின் பின்னர் check and apply என்பதை கிளிக் செய்து கொள்ளவும்..கிளிக் செய்தவுடன் நீங்கள் அடுத்த பக்கத்துக்கு நுழைந்து கொள்வீர்கள்..Verification என்ற பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்துக்கும் விடையை கொடுக்கவும்..

அவற்றை submit செய்த பின்னர் அடுத்த பக்கத்தில் உள்நுழைய முடியும்.. அதில் 5 பிரிவுகளாக உங்கள் விபரங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக நிரப்பிக் கொள்ளவும்..

இறுதியாக add extra documents என்பதில் நீங்கள் இணைக்க வேண்டிய documents இணை இணைத்து கொள்ளவும்..