Schools Opens at 21 july

Schools Opens at 21 july

அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.