Open competitive examination for Grama niladhari service 2021
தமிழ் வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளது…
நாடு பூராகவும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெற்றிடங்கள் நிலவும் கிராம அலுவலர் பிரிவுகளில் கிராமசேவகர் களை நியமிப்பதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்து கொள்வதற்காக தகமை உள்ள ஆண் பெண் இருபாலரிடமும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன..
விண்ணப்பதாரிகள் ஆறாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் தாம் தகைமை பெறும் பிரதேச செயலாளர் பகுதியில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பிரதேச செயலாளர் பகுதிகள் மற்றும் மாவட்டங்கள் பற்றிய விபரங்கள் முதலாம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் தான் விண்ணப்பிக்கும் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதன் இலக்கம் என்பவற்றை அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி சரியாக விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட இடத்தில் குறிப்பிடுதல் வேண்டும்..
விவரங்களை தெளிவாகக் குறிப்பிடும் போது விண்ணப்பதாரர் ஒருவருக்கு ஏற்படும் எந்த ஒரு நஷ்டம் தொடர்பாகவும் கொடுக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி பரீட்சை தொடர்பான விபரங்கள்
போட்டிப் பரீட்சையை மூன்று மொழிகளிலும் நடைபெறும்.அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் எனினும் பரீட்சை மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க போதுமான அளவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்காத மாவட்டங்களில் நடாத்துவது கடினம் என்பதால் அந்த குறித்த மாவட்டத்திலுள்ள விண்ணப்பதாரிகள் வேறொரு பரீட்சை மத்திய நிலையத்தை தெரிவு செய்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஒரு மொழியில் மாத்திரம் தோற்றுதல் வேண்டும். விண்ணப்பிக்க படும் மொழி மாற்றப் படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
போட்டி பரீட்சை:
மொழியாற்றல் | 1 மணித்தியாலம், 30 நிமிடங்கள் | 100 புள்ளிகள் |
பொதுஅறிவு, உளச்சார்பு | 1 மணித்தியாலம், 30 நிமிடங்கள் | 100 புள்ளிகள் |
விண்ணப்ப முடிவுத் திகதி: 28.06.2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
கிராம சேவை அலுவர் பதவிக்காக விண்ணப்பிக்க இருப்பவர்களுக்காக..
அறிமுகம்
நாடு பூராகவும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெற்றிடங்கள் நிலவும் கிராம அலுவலர் பிரிவுகளில் கிராமசேவகர் களை நியமிப்பதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்து கொள்வதற்காக தகமை உள்ள ஆண் பெண் இருபாலரிடமும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன... எனவே உயர் தரம் படித்து விட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு இந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள இது வாய்ப்பாக அமைகின்றது. குறித்த பரீட்சையில் முறையாக சித்திடைவதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தகவல்களை இந்தப் பதிவு வழங்குகின்றது.
கிராம உத்தியோகத்தர் என்பவர் யார்?
கிராம அலுவலர் அல்லது கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari “village officer” எனப்படுபவர் கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராவார். கிராம சேவையாளரின் பணியாக புள்ளி விபரங்கள் திரட்டுதல், வாக்காளர் பதிவைப் பராமரித்தல், அனுமதி வழங்கலை அறிக்கையிடல், தனிநபர் சச்சரவுகளை சரி செய்து சமாதானத்தைப் பேணல் ஆகியனவாகும். இவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை கண்காணிப்பதும், அங்குள்ளவர்களின் தேவையின் பொருட்டு அவர்களுக்கு நன்நடத்தை சான்றும் வழங்குவது இவர்களது பொறுப்பாகும்.
வயதெல்லை என்ன?
21 வயதுக்குக் குறையாமலும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கிராம சேவையாளருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்;-
47 990மொத்த சம்பளமாகக் கிடைக்கப்பெறும். அதிலிருந்து ஓய்வூதியத்துக்காக 6% கழிக்கப்படும்.
கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகைமைகள் என்ன?
(அ) கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் முதல் மொழியாக சிங்களம்/தமிழ் மொழி ஆகிய பாடங்களுள் ஒரு பாடத்தினையும்,
கணிதம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (4) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங் களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் ;
அத்துடன்
(ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கில மொழி தவிர) ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல். பழைய பாடத்திட்டத்தின் கீழ் மூன்று (3) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருப்பது போதுமானது.
தெரிவுமுறை எவ்வாறு இடம்பெறும்?
1) எழுத்துமூலப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும். அந்த பரீட்சையில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுத்தப்படுவார்கள். ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் காணப்படுகின்ற வெற்றிடங்களில் இரண்டு மடங்கானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.
இறுதியாக எழுத்துப் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் நேர்முகப்பரீட்சையின் புள்ளிகள் என்பவற்றின் கூட்டுத்தொயாக அத அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் பதவிகளுக்காக நியமனம் பெறுவார்கள்.
எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு
01) மொழிப் பரீட்சை ;- இது மொழியாற்றலை பரிசோதிப்பதாக அமையும். க.பொ.த (சா/த) தமிழ்மொழி புத்தகத்தில் உள்ள விடயங்களை மீட்டிப் பார்த்துக்கொள்வது போதுமானது. குறித்த வினாத்தாள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அமையும்.
இவ்வினாப்பத்திரம் விண்ணப்பதாரர்களின் கருத்துத் தெரிவிப்பு, புரிந்துகொள்ளுதல், எழுத்துரு அமைப்பு, மொழியும் கட்டுரையும், வழங்கப்பட்ட கடிதமொன்றை வரைதல், வழங்கப்பட்ட பந்தியொன்றை சுருக்குதல். வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி விபரங்களைத் தயாரித்தல், வாக்கியங்கள் சிலவற்றின் கருத்தைத் தனிவாக்கியத்தில் எழுதுதல், இலகுவான இலக்கணப் பயன்பாடு
குறித்த அறிவைப் பரிசீலனை செய்யும் வினாக்களைக் கொண்டது. சகல
வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்.
1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
(02) பொதுஅறிவும் பொது உளசார்பும்; விண்ணப்பதாரரர்களின் கிரகித்தல் திறனையும் பொது அறிவுத்திறனையும் பரிசோதிப்பதற்காக பொது அறிவும் உளச்சார்பும் என்ற வினாத்தள் வழங்கப்படும்.
இவ்வினாப்பத்திரம் மூலம்
நாட்டின் வரலாறு, பூகோல, சமூக பொருளாதார ரீதியில் முக்கியமான தகவல்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாடடு சமகாலத் தகவல்கள் பற்றிய பொது அறிவு, எண் கணிப்பு, தர்க்கிக்கும் சக்தி, பிரச்சினை தீர்த்தல், தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றல் உட்பட பொது அறிவை அளவிடும் வகையில் தயாரிக்கப்படும் பல்தேர்வு மற்றும் சுருக்கமான விடைகளை வழங்கும்
மாதிரியிலான வினாக்ககளைக் கொண்டது. எல்லா வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்.
1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
03 . கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ; இங்கு கீழ்வரும் அடிப்படையில் புள்ளி வழங்கப்படும்.
- தலைமைத்துவம் 15,
- விளையாட்டுத் திறமை 05,
- மொழித்திறமைகள் (தாய்மொழி தவிர்ந்த ஏனைய மொழித் திறமைகள்) 10,
- கணினி அறிவு 15,
- நேர்முகப் பரீட்சையில் காண்பிக்கப்பட்ட திறமைகள் 05,
- மொத்தம் 50 புள்ளி
அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் என்பவற்றில் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் அல்லது கடிதங்கள் மாத்திரமே கவனத்திதில் கொள்ளப்படும். உதாரணமாக அறநெறிப் பாடசாலை ஆசிரியர் ஒருவராகக் கடமையாற்றுதல், கிராம அபிவிருத்திச் சங்கமொன்றில் பதவி வகித்தல், விளையாட்டுக் கழகமொன்றில் பதவிகள் வகித்தல் போன்ற விடயங்கள் பிரதேச செயலாளரினால்
உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்
அத்துடன் கிராம அலுவலர்களுக்கு அரசியல் உரிமைகள் இல்லையாதலால் அரசியல் மட்டத்திலான அமைப்புகளில் பதவிகள் வகிப்பது தொடர்பாகப்
புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. உதாரணமாக பிரதேச சபைகள்/ நகர சபைகளின் உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்
போன்ற அரசியல் கட்சி பிரதிநிதித்துவத்தினால் பெறப்படும் பதவிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நேர்முகப் பரீட்சையில் தெரிவானதன் பின்னரான செய்பாடுகள் யாவை?
நேர்முகப் பரீட்சையில் தெரவாகின்றவர்கள்ள மூன்று மாதகாலப் பயிற்சிப் பாடநெறி மாவட்டச்செயலாளரின் மேற்பார்வையின்கீழ் நடைபெறும். அப்பயிற்சிப் பாடநெறி வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கே நியமனம் வழங்கப்படும். பயிற்சிக் காலத்துக்காக 3,000 ரூபா கொடுப்பனவு மட்டும் வழங்கப்படுவதுடன், அக்காலத்தினுள் விடுமுறை உரித்துக்கள் இருக்காது. பயிற்சிநெறி நடைபெறும் நாட்களில் 80% பங்குபற்றுதல் வேண்டும். பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெறும் எழுத்துப் பரீட்சையில் சித்தியடைவதற்காக 50% புள்ளிகள் பெறப்படுதல் வேண்டும்.
பயிற்சிக்காலம்
சேவைக்காலத்துக்குக் கணிக்கப்பட மாட்டாதென்பதுடன், அக்காலம் ஓய்வூதிய விதிகளின் ஏற்பாடுகளுக்கமைய ஓய்வூதியக் கணிப்புக்காக மட்டும் தொடர்புபடுத்தப்படும்..
இறுதியாக..
அரசாங்க பதவிகளைப் பொறுத்தவரையில் ஆரம்ப மட்டப் பதவிகள்தான் அரசாங்க சேவையில் கால் பதிப்பதற்கான சிறந்த தெரிவாகும். இந்த சேவையில் இணைகின்ற ஒருவர் 5 வருட சேவைக்காலத்துடன் ஒருபட்டத்தையும் பெற்றுக் கொண்டிருப்பாரானால் அவரால் இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவை என்ற பதவிகளுக்கான பரீட்சைகளுக்கு தோற்றலாம். அவ்வாறு பரீட்சைகளுக்குத் தோற்றி தற்போது பிரதேச செயலாளர்களாக பதவி வகிப்பவர்களும் இர்கிகன்றனர். இந்த சந்தர்ப்பததை ஒருவாய்ப்பாக பயன்படுத்தி பரீட்சைக்கான ஆயத்தங்களை இப்போதே செய்யவும்..
நாட்டில் சுமார் 2000 கிராம சேவை உத்தியோகத்தர் களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M சித்ராந்த தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரங்களில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பம் வெளியானதும் அனைத்து தகவல்களும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் மற்றும் இணைய தளத்திலும் பகிரப்படும்.
1. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்- click here