PROGRAM OF GIVING FREE LUNCH AT SCHOOLS FOR STUDENTS 2022
நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலையில் மதிய உணவு வழங்கும் திட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக சரியான போசாக்கு கொண்ட உணவுகளை கல்வி கற்கும் மாணவர்கள் உட்கொள்ளும் அளவு குறைந்தும் பல மாணவர்கள் சரியான உணவு கிடைக்காமலும் கஷ்டப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கான அமைப்பு தெரிவிக்கின்றது..
இதனை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு தேவையான மதிய உணவை வழங்குவதற்கான முறையான வேலை திட்டம் ஒன்றை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த மதிய உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளா
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வழமையைப் போன்று தேவையான அளவு உணவுக் கிடைப்பதில்லை என்பதனை அமைச்சர் பாராளுமன்றில் முன்னதாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
இதற்கமையவே மதிய உணவுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
.