Demand for massive power tariff hike 2023

Demand for massive power tariff hike 2023

மின்சாரக் கட்டணத்தை 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தி உள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஐம்பத்து நான்கு பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

னினும் உத்தேச கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டால், ஒரு வருடத்திற்குள் கட்டணங்கள் 200% க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.

கட்டணங்கள் 200% அதிக வாய்ப்பு

கடும் வரட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளதால் 3500 மெகாவாட் மின்சார உற்பத்தி கடும் நெருக்கடியை சந்திக்கலாம் என்பதால் மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் 42 ரூபா தொகை 56 ரூபாவாக அதிகரிக்கப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2022 முதல் மூன்று மின் கட்டண திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

உத்தேச கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டால், ஒரு வருடத்திற்குள் கட்டணங்கள் 200%க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.