NEW DATE FOR GCE OL EXAMINATION 2023
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
எனவே கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.