Arunalu sittham childrens art competition 2024-COMMERCIAL BANK

Arunalu sittham childrens art competition 2024-COMMERCIAL BANK

அன்பார்ந்த சிறார்களே,

உங்கள் மனதில் தோன்றும் அழகான எண்ணங்களை ஓவியமாக வரைந்து எமக்கு அனுப்புங்கள்.

இம்முறையும் வெளிநாட்டில் தற்போது வசிக்கும் நம் நாட்டுப்பிள்ளைகளும் ஓவியங்களை வரைந்து அனுப்பலாம்.

அருணலு சித்திரம் சிறுவர் சித்திரப்போட்டி மூலம் அந்த ஓவியங்களுக்கு பரிசுகளைத் தர நாம் தயாராய் உள்ளோம்.

போட்டி நிபந்தனைகள் (உள்நாடு/ வெளிநாடு)

முன் ஆரம்ப பள்ளிவயது 04 – 052019 / 2020தாம் விரும்பிய தலைப்புA3
ஆரம்ப பள்ளிவயது 06 – 072017 / 2018தாம் விரும்பிய தலைப்புA3
பின் ஆரம்ப பள்ளிவயது 08 – 102014 / 2015 / 2016கிராமிய மக்கள்A3
கனிஷ்டவயது 11 – 132011 / 2012 / 2013சடங்குகள் சம்பிரதாயங்கள்14 அங்குலம் x 18 அங்குலம்
சிரேஷ்டவயது 14 – 162008 / 2009 / 2010எமது கலாச்சாரம்14 அங்குலம் x 18 அங்குலம்
  1. சித்திரப் போட்டிக்காக ஒருவருக்கு ஒரு சித்திரத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
  2. வெளிநாட்டுப் பிரிவில், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப் பிள்ளைகள் மட்டுமே சித்திரப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
  3. தாங்கள் விரும்பிய எந்தவொரு ஊடகத்தையும் பயன்படுத்த முடிவதுடன், ஒட்டும் தன்மையுள்ள, உலராத வர்ணங்களைப் பயன்படுத்தக்கூடாது.
  4. உள்நாட்டு ஓவியப் பிரிவில், போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட உங்கள் சித்திரம் இறுதிச் சுற்றுக்குத் தெரிவானால் அல்லது வெற்றி பெற்றால் நாம் கோரும்போது அந்த ஓவிய மூலப் பிரதியை அதிபர்/உப அதிபர்/சட்டத்தரணியொருவர்/கிராம உத்தியோகத்தர் போன்றவர்களுள் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
  5. வெளிநாட்டு ஓவியப் பிரிவில், பாடசாலை அதிபர்/ உப அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட ஓவிய மூலப் பிரதி எம்மால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கமைய எமக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  6. உங்களால் சமர்ப்பிக்கப்படும் ஓவியம் சுய ஆக்கமாக இருத்தல் வேண்டும். அத்துடன் அது வேறு போட்டிகளுக்கு சமர்ப்பிக்கப்படாத ஓவியமாக இருப்பதுடன், மீண்டும் வரைதல், மற்றவர்களுக்கு வழங்குதல் கூடாது.
  7. சித்திரப் போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களினதும் உரிமை கொமர்ஷல் வங்கிக்கு உரித்தாவதுடன், அவை மீள ஒப்படைக்கப்படமாட்டாது.
  8. சிரேஷ்ட நடுவர் குழுவொன்றின் ஊடாக வெற்றி பெறும் ஸ்தானங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ் பத்திரங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், நடுவர்களின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும்.
  9. இப்போட்டியில் கொமர்ஷல் வங்கியில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் பங்குபற்ற முடியாது.

உங்களது ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முறை

2024 SEP 15 காலப்பகுதிக்குள் www.arunalusiththam.lk வலைத்தளத்தில் சித்திரத்தின் ஸ்கேன் பிரதியுடன் (jpeg மாதிரியில் மெகா பைட் 5 (5mb) இற்கு மேற்படாமல்) தேவையான விபரங்களை உள்ளிடவும்.

வலைத்தளத்தில் உள்ள படிவத்தில் போட்டியாளரின் முழுப் பெயர், பிறந்த திகதி, முகவரி,பாடசாலை மற்றும் அதன் முகவரி தாய் /தந்தை /பாதுகாவலரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் (கையடக்க) என்பவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

உள்நாட்டு சித்திரம்

  • முன் ஆரம்ப பள்ளிப் பிரிவு தவிர்த்து அனைத்து பிரிவுகளுக்கும் – வரிசையில் 1, 2, 3வது இடங்கள், ரூபாய் 100,000 | ரூபாய் 75,000 | ரூபாய் 50,000 மதிப்புள்ள பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  • அனைத்து பிரிவுகளுக்கும் – சிறப்பான திறமைசாலிகள் 25 பேருக்கு ரூ.10,000 மதிப்புள்ள பணப் பரிசு மற்றும் சான்றிதழ்களும், 50 திறமைசாலிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

வெளிநாட்டு சித்திரம்

  • அனைத்து பிரிவுகளிலும் தலா ஒரு வெற்றியாளருக்கு ரூ. 50,000 பணப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.


ரூ.2.4 மில்லியன் பரிசுகளை வெல்லுங்கள். அனைத்து பணப் பரிசுகளும் கொமர்ஷல் வங்கியின் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.

பணப் பரிசுகளை வெல்லும் அருணலு/இசுறு கணக்கு உரிமையாளர்களுக்கு மேலதிக சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

மேலதிக விபரங்கள் +94 11 235 3333 அழையுங்கள். 

.கீழே உள்ள சமர்ப்பியுங்கள் என்ற லிங்கை அழுத்தி உங்களால் ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்..