Application for the Post of Micro Finance Associate – Hatton National Bank PLC
HNB “கெமி புபுதுவ” என்ற பெயரில் ஹற்றன் நஷனல் வங்கி 1989ஆம் ஆண்டில் ஆரம்பித்த பிரத்தியேக நுண்நிதி திட்டம் அன்றிலிருந்து ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந் திட்டம் வங்கியின் வெளிக்கள ஊழியர்களின் ஊடாக ஏராளமான சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு நுண்ணளவு நிதித் தீர்வுகளை வழங்கியுள்ளதுடன், எண்ணற்ற மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுத்துள்ளது. வெளிக்கள ஊழியர் அணியைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த நன்முயற்சியை மேலும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ள வங்கி, கிராமப்புற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகச் சேவையாற்றக்கூடிய உத்வேகமான இளைஞர்களை நுண்நிதி துணை அலுவலர்களை நியமிக்கவிருக்கிறது.