RDB ONINE APPLICATION INSTRUCTIONS

கீழே கொடுக்கப்பட்டுள்ள Apply என்பதை கிளிக் செய்வதன் மூலம் rdb வங்கியின் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உங்களால் நுழைய முடியும்..

1.ஆன்லைன் விண்ணப்ப பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.. இதில் நீங்கள் முதன் முறையாக விண்ணப்பிக்கும் நபராக இருக்கும் பட்சத்தில் signup என்பதை கிளிக் செய்து உங்களை register செய்து கொள்ள வேண்டும்..

2.Signup என்பதை கிளிக் செய்த பின்னர் கீழே உள்ளவாறு ஒரு பக்கம் தோன்றும்.. அதில் உங்கள் முதல் எழுத்துக்களுடன் பெயர், உங்கள் ஈமெயில் முகவரி (தற்சமயம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஈமெயில் முகவரியை மட்டும் கொடுக்கவும்), அதற்கான பாஸ்வேர்ட், மற்றும் ஒரு secret question என்பன கேட்கப்பட்டிருக்கும்..

Secret question இல் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு கேள்வியை தெரிவு செய்து அதற்கான பதிலையும் கொடுத்து வைத்துக் கொள்ளுங்கள்..சில சமயங்களில் உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மறந்தால் இந்தக் கேள்வியை பயன்படுத்தி உங்களால் அதை மீள பெற்றுக்கொள்ள முடியும்..

3..எல்லா பகுதிகளையும் முழுமையாக நிரப்பிய பின்னர் register என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு திரை தோன்றும்…

NOTEபின்னர் நீங்கள் ஏற்கனவே கொடுத்த ஈமெயில் முகவரிக்க்குள் உள் நுழையுங்கள்.. அங்கே rdb வங்கியால் ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருக்கும்.. குறித்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் account ஐ activate செய்து கொள்ள முடியும்.

4.Activate ஆனவுடன் உங்களுக்கு கீழ்வருமாறு திரை தோண்றும்…

5.குறித்த திரையில் signin என்பதை கிளிக் செய்வதன் மூலம்SIGN IN பக்கத்திற்கு செல்ல முடியும்..குறித்த பக்கத்தில் உங்கள் ஈமெயில் முகவரி மற்றும் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்டு என்பவற்றை பயன்படுத்தி  விண்ணப்பத்தில் உள்நுழைய முடியும்..

உள் நுழைந்த பின்னர் பின்வருமாறு ஒரு பக்கம் தோன்றும்..அதில் click here என்பதை கொடுக்கவும்..

6.கொடுத்த பின்னர் கீழ்வருமாறு ஒரு பக்கம் தோன்றும் அதில் Add என்பதை கிளிக் செய்யவும்..

7.பின்னர் job cart பக்கம் தோன்றும்.. அதில் trainee Banking Assistant என்பதற்கு முன்னால் உள்ள வட்டத்தை தெரிவு செய்து அதன்பின் apply என்பதை கிளிக் செய்யவும்..

8.இறுதியாக உங்களால் வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவத்தின் நிரப்பும் பக்கத்திற்கு நுழைய முடியும்..

இதில் ஐந்து பிரிவுகளாக காணப்படும்..

1. Personal– உங்கள் சுய விபரம் சார்பானது.. பெயர் முகவரி பிறந்த திகதி விலாசம் போன்றவை..

2. qualification

உங்கள் சாதாரண தர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான தகவல்கள் மேலதிகமாக உங்களிடம் ஏதேனும் சான்றிதழ் அல்லது டிப்ளமோ அல்லது degree ஆகியன இருப்பின் அவற்றையும் குறிப்பிட முடியும்..

3. experience 

இதற்கு முன்னர் நீங்கள் ஏதேனும் வேலை செய்து இருப்பின் அது தொடர்பான விபரத்தை குறிப்பிட முடியும்..training செய்திருந்தாலும் குறிப்பிட முடியும்..

4. achievements 

நீங்கள் பாடசாலை ரீதியில் அல்லது மாவட்ட தேசிய ரீதியில் ஏதேனும் விளையாட்டு அல்லது கலை நிகழ்ச்சி, அல்லது வேறு ஏதேனும் பிரிவில் சாதனைகளை நிகழ்த்தி இருந்தால் அவற்றை இதில் குறிப்பிட முடியும்..

5.general 

இதில் உங்கள் உறவினர் அல்லாத 2 நபர்களின் பெயர் மற்றும் அவர்களுடைய பதவி, தொழில் செய்யும் இடம், தொலைபேசி இலக்கம், இமெயில் இதற்கான விபரங்களை குறிப்பிட வேண்டும்..

குறித்த இரு நபர்களும் அரச பதவியை வகிப்பவர் களாக , அல்லது சமாதான நீதவான், சட்டத்தரணி, உயர் பாதுகாப்பு அதிகாரி, பாடசாலை அதிபர் அல்லது ஏதேனும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஆக இருக்க முடியும்.

நிரப்பும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்.

1. ஒரு பகுதியை நிரப்பி முடித்த பின்னர் save குடுத்து மற்றைய பகுதியை நிரப்ப ஆரம்பிக்கவும்.. உதாரணமாக personal பக்கத்தை முழுமையாக நிரப்பி எல்லா தகவல்களையும் சரிபார்த்த பின்னர் அதிலுள்ள save என்பதை கொடுத்த பின்னர் qualification பக்கத்தை நிரப்ப ஆரம்பியுங்கள்..

2. qualification

எந்த ஒரு தவறான தகவல்களையும் வழங்க வேண்டாம்..

இதில் முதலாவதாக சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விவரத்தை நிரப்பிய பின்னர் add Qualification என்பதை கொடுத்து அதன் பின்னர் உயர்தர பெறுபேறு விடயங்களை நிரப்பி அதனையும் add Qualification கொடுத்த பின்னர் save செய்ய வேண்டும்..

3. தவறுதலாக  ஏதேனும் தகவலை பிழையாக நிரப்பி save செய்துவிட்டால் குழப்பமடைய தேவையில்லை..அதனை மீண்டும் edit செய்து மறுபடியும் save செய்து கொள்ள முடியும்..

இதுபோன்ற வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சார் தகவல்களை வழங்கும் நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்வதன் மூலமாக தொடர்ச்சியாக பல வேலைவாய்ப்பு தகவல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்..