When will the schools reopen ?
*பாடசாலைகள் எப்போது மீளத் திறக்கப்படுகின்றன? முக்கிய அறிவிப்பு வெளியானது!*
நாடு முழுவதுமுள்ள 200 இற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 1ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர், அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது