Health guidelines for schools 2021

Health guidelines for schools 2021

பாடசாலைகளுக்கான விஷேட சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு*

பாடசாலைகளுக்கான விஷேட சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அல்லது கொவிட் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் ஒருவர் இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் நடந்து கொள்ள வேண்டிய விதம் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவ்வாறு இனங்காணப்படும் தொற்றாளரை அல்லது சந்தேகத்திற்குரிய நபரை பாடசாலையின் தனி இடம் ஒன்றில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவர் இவ்வாறு இனங்காணப்பட்டால் உடனடியாக பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார சேவைகள் அதிகாரிக்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்படுகின்றது..

வெளியிடப்பட்ட வழிகாட்டி ஆங்கில வடிவத்தில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது..