இந்த வருடம் உயர்தர பெறுபேறுகள் வெளியான மாணவர்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு..
2020/2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் இந்த மாதம் 21ஆம் திகதி முதல் அதாவது நாளை மறுதினம் முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..
கடந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி உள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இணையத்தளத்தின் ஊடாக முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தின் பிரதி ஒன்றை எடுத்து அதில் கையெழுத்திட்டு apply2020@UGC.ac.lk என்ற email முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வருடந்தோறும் வெளியிடப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாணவர்களுக்கான கையேடு அன்றைய தினமே நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதன்படி இந்த கையேட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
NEW UPDATE
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த வருடத்துக்கான 2021 வழிகாட்டி கைநூல் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் தற்போது வெளியாகியுள்ளது.. அது தொடர்பான முழுமையான விபரங்களைப் பெற இங்கே க்ளிக் செய்யவும் – CLICK HERE
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கையேடு மற்றும் முழுமையாக விண்ணப்பம் நிரப்புவதற்கான வழிகாட்டுதல் என்பவற்றை நமது இணையதளம் மற்றும் வாட்ஸ் அப் குழுமங்களில் பகிர்ந்து கொள்வோம்..
இந்த செய்தியை முடிந்தவரை உங்கள் உயர் தர பெறுபேறுகள் வெளியான நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.