Government Sector Recruitment: Full Details on 26000 Vacancies

Government Sector Recruitment: Full Details on 26000 Vacancies

2026 ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வழிகாட்டி

மொத்த வெற்றிடங்கள் (Vacancies): 23,344

பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக்கொள்வதற்கு உரிய (Limited,Open) விண்ணப்பம் இருவார காலத்தினுள் கோரப்படும்- கல்வி அமைச்சு . எனவே FEBRUARY மாதத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் எதிர்பார்க்க முடியும் இலங்கை ஆசிரியர் சேவைக்காக இவ்வளவு பாரிய எண்ணிக்கையான வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பரீட்சை வகைகள்

மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை

ஏற்கனவே அரச சேவையில் கடமையாற்றுபவர்களுக்கானது.

திறந்த போட்டிப் பரீட்சை

அரச சேவையில் இல்லாத ஏனைய பட்டதாரிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு முறையாகும்.

தகுதிகள் மற்றும் வயது எல்லை
  • மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை: வயது எல்லை 45 வயது வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • திறந்த பரீட்சை: வயது எல்லை வழமையாக 35 ஆகும். வர்த்தமானி மூலம் இது 40 ஆக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரீட்சை பாடங்கள்

பரீட்சை இரண்டு வினாத்தாள்களைக் கொண்டிருக்கும்:

  • நுண்ணறிவு (IQ)
  • பொது அறிவு: 90% கல்வி சார்ந்த பொது அறிவு வினாக்கள் இடம்பெறும்.
ஆட்சேர்ப்பு நடைமுறை
  1. ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் தற்காலிக திருத்தங்கள்.
  2. வர்த்தமானி அறிவித்தல் (பெப்ரவரி / மார்ச் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது).
  3. போட்டிப் பரீட்சை.
  4. நேர்முகத் தேர்வு மற்றும் 5 நிமிட செய்முறைப் பரீட்சை.

விசேட குறிப்பு: பாடசாலைகளில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நேர்முகத் தேர்வின் போது விசேட முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பரீட்சை வழிகாட்டல் WhatsApp குழுவில் இணையுங்கள்(CLICK HERE)

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு : பிரதமர் அறிவிப்பு

நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் தட்டுப்பாட்டிற்கு 2026 மார்ச் மாதத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

இதற்கான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்றும், மாவட்ட ஆளுநர்களிடமிருந்தும் இதுகுறித்த ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
📢 இதன் அடிப்படையில், 2026 மார்ச் மாதத்துக்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான வர்த்தமானி (Gazette) அறிவித்தலை எதிர்பார்க்க முடியும்.