வடக்கு மாகாண தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் மூன்றாம் வகுப்பு தரம் ஒன்றிற்கு ஆங்கில டிப்ளோமா தாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2021
Open competitive examination for recruitment to class 3 grade 1 of SLTS from English diploma holders for primary teachers 2021
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 26.07.2021
சம்பளம் -29450
தேவையான தகைமைகள்
தமிழ்மொழி மூல விண்ணப்பதாரிகள் வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடப் ஆக கொண்டவராக இருத்தல் வேண்டும்.
முடிவு திகதிக்கு முன்னர் உள்ள 6 ஆண்டு காலப்பகுதியில் ஆக குறைந்தது மூன்று ஆண்டுகளாவது வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வாசித்து இருத்தல் வேண்டும்.
அல்லது
விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தை பிறப்பிடமாக கொண்டிருப்பதுடன் ஆகக் குறைந்தது ஐந்து வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வசித்து இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரியின் வயது 18 தொடக்கம் 44 இடையில் இருத்தல் வேண்டும்..
பட்டப்பின் பட்ட கல்வி டிப்ளோமா அல்லாத நிரல் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இரண்டு வருடத்துக்கு குறையாத பாடநெறி கால எல்லையை கொண்டதும் ஆங்கிலத்தில் டிப்ளோமா பாடநெறி வெற்றிகரமாக பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
மேலதிகமாக சாதாரண தர பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ்மொழி சித்தி
போட்டி பரீட்சையில் ஒவ்வொரு வினா பத்திரத்தையும் குறைந்தது 40 சதவீத புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டு இரண்டிலும் வரப்படுகின்ற புள்ளிகள் கூட்டப்பட்டு புள்ளிகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும்.
பரிட்சை கட்டணம் ரூபாய் 500 அஞ்சல் அலுவலகம் ஒன்றில் செலுத்தி காசுக்கட்டளை இணை செயலாளர் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வடக்கு மாகாணம் என்ற பெயருக்கு யாழ்ப்பாண தபால் அலுவலகத்தில் மாற்ற கூடியவாறு பெற்று பற்றுச்சீட்டு விண்ணப்ப படிவத்தில் உரிய கூட்டினுள் ஒட்டி அனுப்புதல் வேண்டும்,
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து A4 அளவிலான 1 தொடக்கம் 10 வரையான பந்திகள் முதலாம் பக்கத்திலும் ஏனையவை மறு பக்கங்களிலும் உள்ளடங்கும் வண்ணம் விண்ணப்பப்படிவத்தை தயாரித்து அனுப்ப வேண்டிய முகவரி..
செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல 393/48, கோவில் வீதி, நல்லூர் ,யாழ்ப்பாணம்.