G.C.E. Ordinary Level 2025 Results to Be Released After Completion of Marking Process

G.C.E. Ordinary Level 2025 Results to Be Released After Completion of Marking Process

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (க.பொ.த சா/த) பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இவ்வருடப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைவாக, முதலாம் கட்டம் மார்ச் 12 முதல் 23 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 முதல் 10 ஆம் திகதி வரையும் நடைபெறும் என லியனகே குறிப்பிட்டார்.

செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இப்பணிகள் நிறைவடைந்தவுடனேயே, பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான புதிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இந்த WhatsApp குழுவைப் பின்தொடருங்கள்: Follow WhatsApp Group