Graduate Teaching Exam (Vacancies) 2026 (Open)

Calling Applications for Graduate Teaching Vacancies 2026 (Open & Limited)

SINHALA GAZETTE(OPEN)VIEW
APPLICATION LINKPENDING(RELEASED SOON)
ஆசிரியர் போட்டிப் பரீட்சை – 2026

சிங்கள மொழி வர்த்தமானியின் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவமே இது. முழுமையான தமிழ் மொழி தகவல்களை தமிழ் வர்த்தமானி வெளியானதும் பெற்றுக்கொள்ள எமது குழுவில் இணையவும்.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை – 2026
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, 2023.02.10 ஆம் திகதியன்று பொதுச் சேவையில் (அரசாங்க சேவையில்) நியமிக்கப்படாத பட்டதாரிகள் மற்றும் ‘குறிப்பு 3’ இன் கீழ் உள்ள பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, தகுதியுள்ள ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவம் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தில் “Our Services” என்பதன் கீழ் உள்ள “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” ஊடாக வெளியிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை இணையவழியாக (Online) மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 2026 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மு.ப. 09.00 மணிக்கு ஆரம்பமாவதுடன், 2026 மார்ச் மாதம் 05 ஆம் திகதி பி.ப. 09.00 மணிக்கு நிறைவடையும்.
5.1.4. வயதெல்லை:

2023.02.10 ஆம் திகதியன்று 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும் (1983.02.10 முதல் 2005.02.10 வரை பிறந்தவர்கள்).

5.1.5. ஏனைய தேவைகள்:
  • I. இலங்கை பிரஜைகளாக இருத்தல் வேண்டும்.
  • II. சிறந்த நற்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • III. வயதுத் தகுதியை 2023.02.10 அன்றும் ஏனைய தகுதிகளை 2025.06.30 அன்றும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • V. விசேட தேவையுடைய விண்ணப்பதாரர்கள் அது குறித்து விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் மற்றும் வைத்திய சான்றிதழ் பிரதிகளை அனுப்ப வேண்டும்.
குறிப்பு 7: விசேட தேவையுடைய விண்ணப்பதாரர்கள் சாதாரண பாடசாலைக் கட்டமைப்பிற்குள் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் செயற்திறனுடன் பங்களிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்க வைத்திய அதிகாரியிடம் வைத்திய சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.
குறிப்பு 1: விண்ணப்பதாரர் தாம் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை (Hard Copy) பதிவிறக்கம் செய்து, அதில் தனது கையொப்பத்தை ஒரு சமாதான நீதவானிடம் (Justice of Peace) அத்தாட்சிப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும் என்பதுடன், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படும் போது அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு 2: இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொதுச் சேவையில் (அரசாங்க சேவையில்) இல்லாத பட்டதாரிகளிடமிருந்தே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எனவே 2023.02.10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள், இந்த வர்த்தமானி அறிவித்தலின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.

குறிப்பு 3: மேலே உள்ள குறிப்பு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களின்படி தகுதிகளைக் கருத்திற் கொள்ளும்போது, 2023.02.10 ஆம் திகதியன்று விண்ணப்பிக்கத் தகுதியற்றிருந்தாலும், 2023.02.10 ஆம் திகதியன்று 40 வயதுக்கு மேற்படாதவர்களாகவும், அதேநேரம் 2023.02.10 ஆம் திகதிக்குப் பின்னரும் 2025.06.30 ஆம் திகதிக்கு முன்னரும் பட்டப் படிப்பைத் தகுதிபெற்றுப் பூர்த்தி செய்தவர்களுக்கும்; இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்பிப்பதற்கு எவ்வித தடையுமில்லை.
02. சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் முறை:

2.1 இதற்கான எழுத்துப் போட்டிப் பரீட்சை, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி அறிவித்தலின் 10.1 ஆம் பிரிவின்படி நடத்தப்படும். 2.2 எழுத்துப் போட்டிப் பரீட்சையின் அனைத்து வினாத்தாள்களுக்கும் தோற்றி, ஒவ்வொரு வினாத்தாளுக்கும் ஆகக்குறைந்தது 40% புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்களில், மொத்தப் புள்ளிகளின் முன்னுரிமை வரிசைப்படி நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.

குறிப்பு 4: இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் கோவையின் படி, வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 3% எனும் அதிகபட்ச எல்லைக்குள் நிரந்தர வலுவிழந்த நபர்கள் பொது நேர்முகப் பரீட்சை சபைக்கு முன்னிலையாக உரித்துடையவர்கள்.
குறிப்பு 5: ஒரே பாடசாலைக்கு விருப்பம் தெரிவித்த விண்ணப்பதாரர்கள் சிலர் சமமான புள்ளிகளைப் பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தில், பாடசாலைகளுக்கான நியமனம் வழங்குவது தொடர்பாக அமைச்சின் செயலாளர் / சம்பந்தப்பட்ட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் தீர்மானம் எடுக்கப்படும்.

2.6 இந்த ஆட்சேர்ப்பானது பாடசாலை ரீதியான வெற்றிடங்களின் அடிப்படையில் செய்யப்படுவதால், ஐந்து (05) வருடங்கள் முடியும் வரை எக்காரணம் கொண்டும் இடமாற்றங்கள் வழங்கப்படமாட்டாது. 2.7 இந்த ஆட்சேர்ப்பின் போது தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் எனத் தனித்தனியாகவே ஆட்சேர்ப்பு செய்யப்படும். 2.8 நீங்கள் தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் ஆகிய இரண்டு (02) வகைகளுக்கும் அல்லது ஒரு வகை பாடசாலைக்கு மாத்திரம் உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க முடியும்.

2.9 வதிவிட மாகாணத்தின் அடிப்படையில் பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்படும். 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மாகாணமே நிரந்தர வதிவிட மாகாணமாகக் கருதப்படும்.

2.10.1 வதிவிட மாகாணத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு மாகாணத்திற்கும் விண்ணப்பிக்க முடியும். 2.10.3 இங்கு மேலதிக மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அப் மாகாணத்தில் நிரந்தரமாக வதிவோரை ஆட்சேர்ப்பு செய்த பின்னர், மேலும் வெற்றிடங்கள் நிலவுமாயின் மட்டுமே இவ்விண்ணப்பதாரிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

கவனிக்க: கிழக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வதிவோர் அல்லாத விண்ணப்பதாரர்கள், கிழக்கு மாகாணத்தில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பப் பாடப்பிரிவு மற்றும் வழிகாட்டல் ஆலோசனை ஆகிய பாடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

03. பணியில் அமர்த்துவதற்கான நிபந்தனைகள் & 04. சம்பளம்:

இப்பதவி நிரந்தரமானது மற்றும் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டது. அரச நிருவாகச் சுற்றறிக்கையின் படி ரூபா 53,060 – 66,600/- என்ற மாதாந்த சம்பள அளவுத் திட்டத்திற்கு நீங்கள் உரித்துடையவர். ஆரம்பச் சம்பளம் ரூபா 64,440/- இல் நிர்ணயிக்கப்படும்.

05. கல்வித் தகுதிகள்:

5.1.2 பட்டப்படிப்பில் பயின்ற பிரதான பாடம்/பாடங்களுக்கு ஏற்பவே உரிய ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பாடத்திற்குரிய உள்ளடக்கமானது தனது பட்டப்படிப்பின் மொத்தப் பாடப்பரப்பில் 1/3 பகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். 5.1.3 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிங்கள மொழி அல்லது தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கொண்டு சித்தியடைந்திருக்க வேண்டும்.

ஆசிரியர் போட்டிப் பரீட்சை – முக்கிய தகவல்கள்

ஆசிரியர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்

போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் வயது எல்லை

🔹 மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை: 2023.02.10 அன்று 45 அல்லது அதைவிட குறைவான வயதைக் கொண்டிருக்க வேண்டும்.
🔹 திறந்த பரீட்சை: 2023.02.10 அன்று 40 அல்லது அதைவிட குறைவான வயதைக் கொண்டிருக்க வேண்டும்.
📌 ஆசிரியர் போட்டி பரிட்சைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் Degree க்கு பொருத்தமான சாதாரண தர (GCE OL) மாணவர்களுக்கான பாடங்களில் இரண்டு பாடங்களையும், உயர்தர மாணவர்களுக்கான பாடங்களில் இரண்டு பாடங்களையும் தெரிவு செய்ய முடியும்.
📌 தங்களுடைய மாகாணத்துக்கு மேலதிகமாக வேறு ஒரு மாகாணத்தில் விண்ணப்பிக்கும் பாடத்திற்கு பொருத்தமான வெற்றிடங்கள் இருந்தால் மேலதிகமாக இன்னும் ஒரு மாகாணத்தையும் தெரிவு செய்ய முடியும்.
முக்கிய குறிப்பு: வேறு மாகாணத்தைத் தெரிவு செய்யும்போது அந்த மாகாணத்தை வதிவிடமாகக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே அடுத்த மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
📌 ஆன்லைன் விண்ணப்பத்தில் உங்கள் Degree certificate அல்லது Transcript சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. Degree name, University, Effective date குறிப்பிட்டால் போதுமானது.
📌 விண்ணப்பிக்கும் ஒருவர் தேசிய பாடசாலைக்கு விண்ணப்பிக்க முடியும், அல்லது மாகாண பாடசாலைக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும், அல்லது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பிக்க முடியும்.

ஆசிரியர் வழிகாட்டல் குழு

முழுமையான தமிழ் மொழி வர்த்தமானி தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது குழுவில் இணையுங்கள்.