GS appointment available for 4000 people job vacancies 2023 (UPDATED ON 26.11.2023)
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான அனைத்து வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான பரீட்சாத்திகளுக்கு கிராம அலுவலர் பரீட்சையை டிசம்பர் 02ஆம் திகதி நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பரீட்சையில் இருந்து கிராம அலுவலர் பணியிடங்களுக்கு 2,238 பேர் தெரிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் 2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில்
“இலங்கையில் 14,022 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.
30.06.2023 ஆம் திகதி அன்றைய நிலவரப்படி 2,763 கிராம அலுவலர் பணியிடங்கள் வெற்றிடங்களாக உள்ளன. அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் 31.03.2023 அன்று வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மேலும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கிராம சேவகர் பதவிக்கு தற்பொழுது நடத்தப்படும் பரீட்சை ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே. .. தற்பொழுது புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் எந்த ஒரு விண்ணப்பதாரியும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.. அவர்களுக்கான எந்த விண்ணப்ப கோரலும் இடம்பெறவில்லை.
எனவே ஏற்கனவே இதற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் குறித்த பரிட்சைக்கு தயாராக முடியும் .. உங்களுக்கான அனுமதி அட்டைகள் அடுத்த சில நாட்களுக்குள் தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கிடைக்கப்பெறும்
இதற்கமைய வர்த்தமானி அறிவித்தலின்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு 2023 டிசம்பர் மாதம் பரீட்சையை நடத்தவுள்ளது. முதல் வாரத்தில் பரீட்சை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
2021 வெளியான கிராம சேவகர் பதவிக்கான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இங்க அழுத்தவும்– CLICK HERE
past paper Download for Grama niladhari exam 2023 – DOWNLOAD
கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ள தொலைதூர பிரதேசங்களில் விசேட தகைமையின் அடிப்படையில் பரீட்சையை நடாத்திய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.