Interest Free Student Loan Scheme-2024
HAND BOOK(DOWNLOAD)
CLOSING DATE-27.10.2024(EXTENDED)
வட்டி இல்லாத மாணவர் கடன் யோசனைத் திட்டம்
திட்டம் பற்றிய விளக்கம்:
- கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவினால், க. பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது.
- கல்வி அமைச்சினால் அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
8 வது உட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள்:
- க. பொ.த (உயர்தர) பரீட்சையில் 2020 / 2021 / 2022 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கு www.studentloans.mohe.gov.lk இணையத்தளத்தின் மூலமாக இலகுபடுத்தப்பட்டுள்ள நிகழ் நிலை(Online) முறைமையைப் பயன்படுத்த வேண்டும்.
- நிகழ் நிலை விண்ணப்பங்களை 09 sep 2024 முதல் 20 oct 2024 வரை சமர்ப்பிக்கலாம்.
குறைந்தபட்ச நுழைவுத் தகுதிகள்?
- ஒரே தடவையில் மற்றும் மூன்று தடவைகளுக்கு மேற்படாது அனைத்து மூன்று பாடங்களுக்காகவும் சாதாரண (S) சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
- மூன்று தடவைகளுக்கு மேற்படாது எந்த அமர்விலும் சாதாரண பொதுப் பரீட்சைக்கு குறைந்த பட்சம் 30 புள்ளிகளை பெற்றிருத்தல். (நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும் நேரத்தில் பெறப்பட வேண்டும்)
- க. பொ.த (உயர் தர) பரீட்சையில் பொது ஆங்கிலத்தில் சாதாரண (S) சித்தி அல்லது க. பொ.த (சாதாரண தர) ஆங்கிலத்தில் சாதாரண (S) சித்தி.
வேறு தகைமைகள்?
- தயவு செய்து மாணவர் கையேட்டினை www.studentloans.mohe.gov.lk இல் பார்வையிடவும்.
தெரிவு செய்யும் கோட்பாடுகள்?
- பொருத்தமான பாட நெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதானது பின்வரும் அடிப்படை களை கொண்டதாக இருக்கும்:
- குறைந்தபட்ச நுழைவுத் தகுதிகளை பெற்றிருத்தல்.
- பட்டப் பாட நெறிகளுக்கு அவர்களால் வழங்கப்படும் முன்னுரிமை விருப்புத் தொடரொழுங்கு.
- சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களால் பட்டப் பாட நெறிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை.
- பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் இருக்கை கொள்ளளவினை விட அதிகமாக இருந்தால், விண்ணப்பதாரர்கள் க. பொ.த (உயர்தர) பரீட்சையில் பெற்ற Z- புள்ளிகளின் தகுதி வரிசையில் தேர்வு செய்யப்படுவர்.
கடன்களை எவ்வாறு பெறுவது?
- கல்வி அமைச்சானது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்கு இலங்கை வங்கிக்கு சிபாரிசு செய்கிறது.
- மாணவர்கள் தமது கடன் விண்ணப்பத்தை இரண்டு பிணையாளர்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். (பெற்றோரில் ஒருவர் மற்றும் நெருங்கிய உறவினர்களில் ஒருவராக இருக்க வேண்டும்).
- அவர்களின் பொருளாதார நிலை இந்த கடன் திட்டத்திற்கு பரிசீலிக்கப்படமாட்டாது.
- கற்கைகளின் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் பரிந்துரையின் படி செமஸ்டர் வாரியாக செமஸ்டர் கட்டணம் செலுத்தப்படும்.
மாணவர்களது பொறுப்பு?
- வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் வசதியளிக்கப்படும் அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் பொதுத் தேர்ச்சி (“C” சித்தி) பெற வேண்டும்.
- அவர்களின் படிப்பு நேரத்தில் 80% வருகையைப் பராமரிக்க வேண்டும்.
எவ்வாறு திருப்பிச் செலுத்துவது?
- IFSLS இற்குரிய மொத்த கடன் காலம் 12 ஆண்டுகளாகும்.
- கடனைத் திருப்பிச் செலுத்துவது கற்கைக் காலத்தின் பின்னராகும் மற்றும் ஒரு வருட கால அவகாசத்திற்குப் பிறகு தொடங்கப்பட வேண்டும்.
பட்டப் பாட நெறிக்கான கால எல்லை | கடன் சலுகைக் கால எல்லை | திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் தவணைகளின் எண்ணிக்கை |
---|---|---|
3 வருடங்கள் | 1 வருடங்கள் | 4 வருடங்களின் பின்னர் 96 சம தவணைகளில் 8 வருடங்களுக்குள் |
4 வருடங்கள் | 1 வருடங்கள் | 4 வருடங்களின் பின்னர் 84 சம தவணைகளில் 7 வருடங்களுக்குள் |
IFSLS இன் கீழ் உள்ள அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள்
இல | அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள் |
---|---|
i. | ஸ்ரீ லங்கா இன்ஸரிரியுட் ஒப் இன்பர்மேசன் டெக்னொளஜி (கரன்டி) லிமிட்டெட் நிறுவனம் – SLIIT (மாலபே பிரதான கிளை மற்றும் மாத்தறை கிளை) |
ii. | தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் – NSBM |
iii. | சினெக் கெம்பஸ் – CINEC |
iv. | இலங்கை பௌத்த கற்கை நிறுவனம் – SIBA |
v. | இலங்கை பட்டயக் கணக்காளர்களின் நிறுவனம் – ICASL |
vi. | சனச கெம்பஸ் லிமிட்டெட் நிறுவனம் – SANASA |
vii. | ஹோரைசன் கல்லூரி ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொளஜி லிமிட்டெட் – HORIZON |
viii. | காட்சு ஹைலி அட்வான்ஸ் மெடிக்கல் டெக்னொளஜி ரெயினிங் சென்ரர் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவகம் – KIU |
ix. | எஸ். எல். ரி. கெம்பஸ் (பிரைவட்) லிமிட்டெட் – SLTC |
x. | சீகிஸ் கெம்பஸ் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனம் – SAEGIS |
xi. | ஈசொப்ட் மெட்ரோ கம்பஸ் – ESOFT |
xii. | அக்வய்னஸ் உயர் கல்வி விஞ்ஞான நிறுவகம் – AQUINAS |
xiii. | இன்ஸ்டிடியூட் ஒப் கெமிஸ்ட்ரி சிலோன் – ICHEM |
xiv. | இன்டர் நெஷனல் கொலேஜ் ஒப் பிஸினஸ் டெக்னொலோஜி – ICBT (கொழும்பு பிரதான கிளை மற்றும் கண்டி கிளை) |
xv. | பெனடிக் கெதலிக் இன்ஸ்டிடியூட் – BCI |
xvi. | றோயல் இன்ஸ்டிடியூட் கொழம்போ (பிரைவட்) லிமிட்டெட் – RIC |
xvii. | நாகாநந்தா சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனம் – NIIBS |