Application for Sri Lanka Law College (SLLC) – Entrance Examination 2026
Sri Lanka Law College is inviting applications from eligible candidates to sit for the General Entrance Examination 2026
இலங்கை சட்டக் கல்லூரி பொதுப் பிரவேசப் பரீட்சை – 2027
2027 கல்வி ஆண்டுக்கான மாணவர் அனுமதி
இப்போதே குழுவில் இணையுங்கள் 💬
2027 ஆம் கல்வியாண்டில் ஆரம்பமாகும் முழுநேரப் பாடநெறிக்காக மாணவர்களைத் தகுதிகாண் பரீட்சை மூலம் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
💻 முறைமை: இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக மாத்திரம்.
🎓 விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகைமைகள்
(அ) கல்வித் தகைமை (உயர்தரம்):- இலங்கை அல்லது பிரித்தானிய க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் குறைந்தது இரண்டு (02) “C” சித்திகளும் மற்றும் ஒரு (01) சாதாரண சித்தியும் (S/E) பெற்றிருத்தல் வேண்டும்.
- இலங்கை க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் ஆங்கில மொழிக்கு ஒரு “C” சித்தியும், சிங்களம் அல்லது தமிழ் மொழிக்கு ஒரு “C” சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.
- விண்ணப்பங்கள் முடிவடையும் திகதியன்று (2026.04.30) விண்ணப்பதாரருக்கு 17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
📝 பரீட்சை விவரங்கள்
அனைத்து விண்ணப்பதாரர்களும் 2026 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிரவேசப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.
- பொது அறிவு (General Knowledge) – 01 மணித்தியாலம்
- பொது நுண்ணறிவு (General Intelligence) – 01 மணித்தியாலம்
- ஆங்கில மொழித் தேர்ச்சி (Proficiency in English) – 1 ½ மணித்தியாலங்கள்
- சிங்களம் அல்லது தமிழ் மொழித் தேர்ச்சி – 1 ½ மணித்தியாலங்கள்
💰 கட்டண விவரங்கள்
| பரீட்சைக் கட்டணம்: | ரூபா 1,200/- |
| சட்டக் கல்லூரிக் கட்டணம்: | ரூபா 12,000/- |
சட்டக் கல்லூரிக் கட்டணமான ரூபா 12,000/- ஐ ஹட்டன் நேஷனல் வங்கியின் (HNB) அளுத்கடை கிளையில் உள்ள “Incorporated Council of Legal Education” நிறுவனத்தின் 063020073300 என்ற கணக்கு இலக்கத்திற்குச் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய பின்னர், அந்தப் பற்றுச்சீட்டை (Receipt) ஸ்கேன் செய்து entrance@sllc.ac.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். மின்னஞ்சலில் பெயர், NIC இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடவும்.
🚀 விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தில் “Our Services” -> “Online Applications” ஊடாக சமர்ப்பிக்கவும்.
குறிப்பு: அறிவித்தல்களுக்கிடையே ஏதேனும் முரண்பாடுகள் காணப்படின், சிங்கள மொழி மூல அறிவித்தலே இறுதியானதாகக் கருதப்படும்.
சட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சை வழிகாட்டல்
கடந்த கால வினாத்தாள்கள் (Past Papers), மாதிரி வினாக்கள் மற்றும் மேலதிக வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ள எமது விசேட குழுவில் இணையுங்கள்.
WhatsApp குழுவில் இணையுங்கள்| APPLICATION | APPLY HERE(PENDING)-STARTS FROM 30.03.2026 |
