MSO OPEN EXAM APPLICATION 2025

MSO OPEN EXAM APPLICATION 2025

MSO வழிகாட்டல் குழுவில் இணைந்து கொள்ள- JOIN CLASS

HOW TO APPLY MSO EXAM(TAMIL VIDEO_CLICK HERE)

DOWNLOAD TAMIL GAZETTE

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புப் பரீட்சை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஆட்சேர்ப்புப் பரீட்சை – 2024 (2025)

III ஆம் தரத்திற்கான திறந்த போட்டிப் பரீட்சை

பரீட்சை அறிவிப்பு

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தர பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2025 செப்டெம்பர் மாதம் நடாத்தப்படும்.

விண்ணப்ப விபரங்கள்

விண்ணப்பங்கள் நிகழ்நிலை (online) மூலம் மாத்திரமே www.doenets.lk என்ற இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும்.

  • விண்ணப்பம் ஆரம்பம்: 2025 ஜூன் 02, மு.ப. 9.00 மணி(PENDING)
  • விண்ணப்பம் முடிவு: 2025 ஜூன் 30, பி.ப. 9.00 மணி
  • விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 2025 ஜூன் 30 ஆம் திகதி.

பரீட்சை நிலையங்கள்

இப்பரீட்சை, அட்டவணை – II இல் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் அமைக்கப்படும் பரீட்சை நிலையங்களில் மாத்திரமே நடாத்தப்படும். விண்ணப்பதாரர்கள் நிகழ்நிலை விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது, பரீட்சைக்குத் தோற்ற எதிர்பார்க்கும் நகரத்தையும் அதனுடன் தொடர்புடைய நகர இலக்கத்தையும் அட்டவணை – II இன் படி சரியாகக் குறிப்பிட வேண்டும்.

தகைமைகள்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு பின்வரும் தகைமைகள் பொருத்தமானவை:

  • (அ) குடியுரிமை: இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • (ஆ) வயது: விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியில் (30.06.2025) 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
    • (அதாவது, 30.06.1995 ஆம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ மற்றும் 30.06.2007 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்.)
  • (இ) நன்னடத்தை: சிறந்த நன்னடத்தையுடையவராக இருத்தல் வேண்டும்.
  • (ஈ) உடல், உள தகுதி: நாட்டின் எப்பகுதியிலும் சேவை செய்வதற்கும், பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் போதுமான உடல், உள தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
  • (உ) கல்வித் தகைமைகள்:
    1. மொழி (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) மற்றும் கணிதம் அடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன், ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
    2. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சையில் (பொதுப் பரீட்சை மற்றும் சாதாரண ஆங்கிலம் தவிர்ந்த) சகல பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்.

சம்பள விபரங்கள்

2025.03.25 ஆம் திகதிய 10/2025 ஆம் இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையின் MN 02-2025 சம்பளக் குறியீடு இந்தப் பதவிக்கு உரியதாகும். அதற்கேற்ற சம்பள அளவுத்திட்டம்:

ரூ. 48,470 – 10×540 – 11×630 – 10×1,010 – 10×1,190 – ரூ. 82,800/-

இச்சம்பளம் உங்களுக்கு 2027.01.01 ஆம் திகதி முதல் உரித்தாகும். நியமனம் நடைமுறைக்கு வரும் திகதி முதல் உங்களுக்கு இச்சுற்றறிக்கையின் இணைப்பு III இன் ஏற்பாடுகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

பரீட்சை நடைமுறை

(அ) இப்பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடாத்தப்படும். விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமான ஒரு மொழியைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதுடன், பரீட்சைக்குரிய அனைத்து வினாத்தாள்களுக்கும் அதே மொழியிலேயே பதிலளிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மொழி பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. இப்பரீட்சை இரண்டு வினாத்தாள்களைக் கொண்டதாகும்:

வினாத்தாள் 01: மொழித்திறன்

  • காலம்: 2 1/2 மணித்தியாலம்
  • புள்ளிகள்: 100

வினாத்தாள் 02: உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)

  • காலம்: 1 மணித்தியாலம்
  • புள்ளிகள்: 100

MSO வழிகாட்டல் குழுவில் இணைந்து கொள்ள- JOIN CLASS

MSO வழிகாட்டல் குழுவில் இணைந்து கொள்ள- JOIN CLASS