உயர்தர தகைமை உடன் சுகாதார அமைச்சின் கீழ் நாடு முழுவதும் அரசு சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக நிரப்பப்பட வேண்டும்.. நிரப்பப்பட்ட விண்ணப்பம் பின்னர் டவுன்லோட் செய்யப்பட்டு பிரிண்ட் எடுக்கப்பட்டு மேலதிக தகவல்கள் கையின் மூலம் நிரப்பப்பட்டு பதிவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பரீட்சை மூன்று மொழிகளிலும் நடைபெறும்.. தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்ய முடியும்…
தேவையான அடிப்படை தகைமைகள்
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதி அன்று 30 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்..
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மற்றும் கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தி..
உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தி
மாவட்ட சனத்தொகையின் விகிதாசாரத்துக்கு ஏற்ப உங்கள் மாவட்டத்தில் உங்களுக்கான நியமனங்கள் பகிர்ந்தளிக்கப்படும்..
நீங்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் பிறந்த ஒருவராக அல்லது பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினத்துக்கு முன்னதாக கடந்த ஐந்து வருடங்களில் அந்த இடத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
அல்லது தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் அந்த மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் கல்வியை பெற்றிருக்க வேண்டும்..
குறித்த பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை டவுன்லோட் செய்ய –
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான லிங்க் –
பரீட்சை கட்டணமாக ரூபாய் 600..
ஆன்லைன் மூலமாக வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி அல்லது வங்கி பற்று அட்டையை பயன்படுத்தி அல்லது இலங்கை வங்கியின் இணைய வழி வங்கி முறைமை மூலமாக அல்லது எந்தவொரு இலங்கை வங்கிக் கிளை ஒன்று நேரடியாக சென்று செலுத்துவதன் மூலமாக அல்லது தபால் திணைக்களத்தின் எந்த ஒரு தபால் அலுவலகம் ஒன்றின் மூலமாகவும் செலுத்த முடியும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் நிரப்பப்பட்டு பின்னர் டவுன்லோட் செய்யப்பட்டு மேலதிக தகவல்கள் கையெழுத்தின் மூலம் நிரப்பப்பட்ட பின்னர் நீங்கள் பதிவு தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி கீழ்வருமாறு..
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ,நிறுவனம் சார் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளை ,இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ,தபால் பெட்டி இலக்கம் 1503 கொழும்பு
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் தினம் 2021 ஆகஸ்ட் 3ஆம் திகதி