REVISED SINHALA , TAMIL & MUSLIM SCHOOL TERM AND HOLIDAY DETAILS 2022
திருத்தப்பட்ட புதிய தவணை அட்டவணை
இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.*
இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கும் இரண்டாம் தவணை விடுமுறை, 4ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் 5ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறும்.
பின்னர், டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை, நத்தார் பண்டிகைக்காக பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முடிவுறுத்தப்படும்.
பெப்ரவரி 16ஆம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதிவரை மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பின்னர் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை மார்ச் முதலாம் திகதி தொடக்கம், மார்ச் 21 வரை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதிவரை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Revised School Terms 2022 – Ministry of Education
Sinhala/ Tamil Schools
First Term-2022.06.06-2022.09.07
Second Term-2022.09.13-2022.12.01
☐ Third Term –
1st Stage-2023.12.05-2022.12.22
2nd Stage – 2023.01.02-2023.01.20
3rd Stage2023.02.20-2023.03.24
Muslim Schools
■First Term – 2022.06.06-2022.09.07
Second Term – 2022.09.13-2022.12.01
■Third Term –
☐ 1st Stage-2022.12.05-2022.12.22
2nd Stage-2023.01.02-2023.02.15
3rd Stage-2023.03.01-2023.03.21
.