SALARY DETAILS FOR GOV SERVANTS 2024

SALARY DETAILS FOR GOV SERVANTS 2024

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியான செய்திகள் பொய்யானவை

  • அதற்கான அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.
  • நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி 12-08-2024 ஆம் திகதி குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
  • உணர்வுபூர்வமான விடயங்களின் போது மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.

2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.

2024 மே மாதம் 27 திகதியிட்ட எண் 24/பல்வகை (020) என்ற அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைக் குழுக்களுக்கு இடையே உள்ள சம்பள முரண்பாடுகளை ஆய்வு செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய வகையில், அரச சேவையின் அனைத்து பிரிவுகளினதும் சம்பளம், ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவானது அரச துறையின் 81 பிரதான தொழிற் சங்கங்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உரிய தகவல்களை ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளது.

இது தொடர்பாக குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெளிவுபடுத்தும் போது, இந்த அறிக்கை தயாரிப்பில் மேலும் பல தொழிற் சங்கங்கள், பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சுமார் 391 தனிநபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள அரச நிதி வாய்ப்புகள் மற்றும் அரச துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, அரச செலவை முகாமைத்துவம் செய்வதற்கான முன்மொழிவுகளுடன்,

ஏற்கனவே உள்ள ஊதிய கட்டமைப்புகளை திருத்துவதற்கான அளவுகோள்கள் மற்றும் தரநிலைகள் அத்துடன் அரச செலவுகளை குறைத்தல் மற்றும் வருமானம் ஈட்டும் மூலோபாயங்களை உள்ளடக்கிய கொள்கை ரீதியிலான கட்டமைப்பை இந்த இடைக்கால அறிக்கை, பரிந்துரைக்கிறது

அதன்படி, அமைச்சரவைப் பத்திரம் எண் 24/1609/601/097, ஆன “அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை” நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினினால் 12-08-2024 ஆம் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த இடைக்கால அறிக்கையை , அமைச்சரவை பரிசீலித்து கலந்துரையாடிய பின்னர், அந்த இடைக்கால அறிக்கையின் பந்தி 03 இல் குறிப்பிடப்பட்டுள்ள (3.1) முதல் (3.18) வரையிலான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரம் அளித்தல் மற்றும் மேற்படி இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உட்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

  • 2025 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திருத்தத்திற்கு உட்படும் வகையில்) ரூ.25,000/- மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்கல்,
  • அரச சேவையில் குறைந்தபட்ச ஆரம்ப மாதாந்தச் சம்பளம் 24% முதல் 50% – 60% வரையில் அதிகரிப்பதோடு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்த சம்பளம் ரூ. 55,000 ஆக மாற்றி அதற்கேற்ப ஏனைய அனைத்து பதவிகளுக்குமான அடிப்படை சம்பளத்தை மாற்றியமைத்தல், வர்த்தக அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தவிர அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்துதல்,
  • 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு அவர்களுக்கு உரிய சம்பள அதிகரிப்புகளை வழங்கி அவர்களின் ஓய்வூதியங்களை மீளாய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்தல்,
  • ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, கடமையில் உள்ள அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் 50%க்கு சம்மாகும் வகையில் ஜனவரி 2025 முதல் வழங்குதல்,
  • தற்போதுள்ள வரிக் கொள்கைகளுக்குள் இந்தச் செலவுகளை நிர்வகிப்பதற்கு உட்பட்டு, இந்த சம்பள முறை மற்றும் முன்மொழியப்பட்ட சம்பள முறை 2025 ஜனவரி 01 முதல் நிதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு படிநிலையாக செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, மேற்படி நிபுணர் குழு தமது இறுதி அறிக்கையை 03.09.2024 அன்று ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதுடன், குறித்த அறிக்கையின் 01 முதல் 08 வரையான பரிந்துரைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அரச சேவைகளின் வகைப்பாடு, அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள், ஓய்வூதிய வேறுபாடுகளை நீக்குதல், விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அநாதைகள் மற்றும் அக்ரஹார செலுத்தல்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் திருத்தங்கள் 01.01.2025 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அங்கீகாரத்தை வழங்குதல், அந்த பரிந்துரைகள் 2025 வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே, இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களை வெளியிடும் போது மக்களை தவறாக வழிநடத்தும் பொய்யான செய்திகளை வெளியிடாமல் உண்மைகளை ஆராய்ந்து சரியான தகவல்களை மக்கள் மயப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு 24 – 50 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு

  • அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 – 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • சாரதிகளுக்கு 6960 – 16,340 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு 8,340-15,685ரூபாய் வரையில் சம்பளன அதிகரிப்பு.
  • முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 12,710 – 17,550 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 12,710 – 25,150 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 12,558 -25,275ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • கதிரியக்கவியல்/ மருந்தாளர்களுக்கு 13,280 – 25,720 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • தாதியர்களுக்கு 13,725 – 26,165 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • அதிபர்களுக்கு 23,245 – 39,595 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • ஆசியர்களுக்கு 17,480 – 38,020 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • பொலிஸ் அதிகாரிகளுக்கு 10,740 – 23,685 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • கிராம சேவகர்களுக்கு 11,340 – 23,575 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு.
  • நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 28,885 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு 43,865 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவிகளுக்கு 57,545 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • வைத்திய அதிகாரிகளுக்கு 35,560 – 53,075 ரூபாய் சம்பள அதிகரிப்பு.
  • வருடாந்த சம்பள அதிகரிப்பு இரட்டிப்பாக்கப்படும்.
  • அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்/முப்படையினருக்கு 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி அரச சேவையின் அலுவலக உதவியாளர் தரம் மூன்றிற்கு 5,450 ரூபாவினாலும், இரண்டாம் தரத்திற்கு 8,760 ரூபாவினாலும், தரம் ஒன்றிற்கு 10,950 ரூபாயினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதோடு, அதன் உயர்தர சேவைகளுக்கு 13,980 ரூபாவினால் சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளது.

அதேபோல் சாரதி சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 6,960 ரூபாவினால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தரத்தின் சம்பளம் 9,990 ரூபாவினாலும், முதலாம் தரத்திற்கு 13,020 ரூபாவினாலும், விசேட தரத்திற்கு 16,340 ரூபாவினாலும் சம்பள அதிகரிப்பு கிடைக்கும்.

மூன்றாம் நிலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ரூ.8,340 சம்பள உயர்வும், இரண்டாம் தரத்திற்கு ரூ.11,690 சம்பள உயர்வும், முதலாம் தரத்திற்கு ரூ.15,685 சம்பள உயர்வும் கிடைக்கும்.

முகாமைத்துவ சேவை அதிகாரி/முகாமைத்துவ உதவியாளர் தரம் III இற்கு ரூ. 10,140 மற்றும் தரம் II இற்கு ரூ.13,490 உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் தர சம்பளம் 17,550 ரூபாயால் அதிகரிக்கப்படும்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் மூன்று சம்பள உயர்வு 12,710 ரூபாவினாலும் இரண்டாம் தரத்திற்கு ரூ.17,820, முதல் தரத்திற்கு ரூ.25,150 வினாலும் அதிகரிக்கப்படும்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர் மூன்றாம் தரத்தின் சம்பளம் 12,885 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இரண்டாம் தரத்திற்கு ரூ.17,945 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,275 சம்பள உயர்வும் கிடைக்கும்.

கதிரியக்க நிபுணர் மற்றும் மருந்தாளர் மூன்றாம் தரத்திற்கு ரூ.13,280 சம்பள அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,310 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,720 சம்பள உயர்வும் கிடைக்கும்.

மூன்றாம் தர தாதியர் உத்தியோகத்தரின் சம்பளம் 13,725 ரூபாயாலும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,835 சம்பள அதிகரிப்பும், முதலாம் தரத்தினருக்கு ரூ.26,165 சம்பள உயர்வும் வழங்கப்படவுள்ளது.

அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 23,425 ரூபாவினாலும், இரண்டாம் தரத்தின் சம்பளம் 29,935 ரூபாவினாலும், மூன்றாம் தரத்திற்கு 39,595 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

ஆசிரியர் சேவையில் உள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.17,480 சம்பள உயர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.19,055 அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.20,425, முதல் தரத்திற்கு 38,020 ரூபாயும் முன்மொழியப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சம்பள உயர்வாக ரூ.10,704 பெறுவார். பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சம்பள ரூ.13,210 வினாலும், சப்-இன்ஸ்பெக்டர்களின் சம்பளம் ரூ.14,050 வினாலும் அதிகரிக்கப்படும். பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.18,290, பிரதான பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.23,685 அதிகரிக்கப்படவுள்ளது.

கிராம உத்தியோகத்தர் முதலாம் தர சம்பளம் 11,340 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த சேவையின் இரண்டாம் தரத்திற்கு ரூ.14,690, முதலாம் தரத்தினருக்கு ரூ.18,750 சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. நிர்வாக கிராம அதிகாரியின் சம்பளம் ரூ.23,575 அதிகரிக்கும்.

உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவி ஆணையாளர் ஆகியோரின் சம்பளம் 28,885 ரூபாவினால் அதிகரிக்கப்படும். பிரதி பணிப்பாளர் ,பிரதி ஆணையாளர்களின் ஆரம்ப சம்பளம் 43,865 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது. பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையாளர், சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 57,545 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆரம்ப தர வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தர வைத்தியர்களின் சம்பளம் ரூ.39,575 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. முதலாம் தர வைத்தியர்களுக்கான சம்பள அதிகரிப்பு 53,075 ரூபாவினாலும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்தியர்களின் சம்பளம் 70,200 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 28,885 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. பிரதிப் பணிப்பாளர் மற்றும் பிரதி ஆணையர்களின் அடிப்படைச் சம்பளம் 43,865 ரூபாயாவினாலும் பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையர், சிரேஷ்ட உதவிச் செயலர் பதவிகளுக்கான சம்பளம் ரூ.57,545 வினாலும் உயர்த்தப்படும்.

அத்துடன் ஆரம்ப நிலை வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினாலும் இரண்டாம் நிலை வைத்தியர்களின் சம்பளம் 39,575 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. முதலாம் நிலை வைத்தியர்களுக்கு 53,075 ரூபாவும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்திய பதவிகளுக்கு 70,200 ரூபாவும் சம்பள உயர்வு வழங்கப்படும்.

அதே சமயம், அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கும் வருடாந்தம் சம்பள உயர்வுத் தொகையை இரட்டிப்பாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஜனவரி 01 முதல் அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் சம்பளத்தை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.