Sri Lanka Bureau of Foreign Employment vacancies 2023-CONSTRUCTION JOBS
EMAILஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) கட்டுமானத் துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள பொறியியலாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் அளவு சர்வேயர்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பை அறிவித்துள்ளது.
கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும் நிர்மாணத் துறையில் அளவீட்டாளர்கள் போன்ற இலங்கைத் தொழில் வல்லுநர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
கட்டுமானத் துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த வல்லுநர்கள்
https://services.slbfe.lk/jobbank/specialjobs?9622 என்ற இணையத்தளம் மூலம் விவரங்கள் மற்றும் அவர்களின் சுயவிரபங்களை சமர்ப்பிக்க முடியும்.
சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புக்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்கான தகவல்களை ஏற்கனவே வழங்கியவர்கள், இந்த இணையதளத்தின் மூலம் தங்கள் தகவல்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.