Trainee banking associate-SDB bank 2026

Trainee banking associate-SDB bank 2026

பயிற்சி வங்கி உதவியாளர்கள் (Trainee Banking Associates)

SDB வங்கியானது, இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட, தீவு முழுவதும் 94 கிளைகளின் வலையமைப்பைக் கொண்ட உரிமம் பெற்ற ஒரு விசேட வங்கியாகும்.

‘வங்கி உதவியாளர்கள்’ அணியில் இணைவதற்கு சுறுசுறுப்பான மற்றும் ஊக்கமுள்ள தனிநபர்களைத் தேடுகிறோம். உங்களின் உற்சாகமும் உந்துதலும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எமது ஆற்றல்மிக்க அணியின் ஒரு பகுதியாக மாறி, உங்கள் தொழில் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

விண்ணப்பதாரர் தகுதிகள்:

  • க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருத்தல் வேண்டும்.
  • க.பொ.த (உயர் தர) பரீட்சையில் 3 முக்கிய பாடங்களில் சாதாரண சித்தி (Simple Pass) பெற்றிருத்தல் வேண்டும்.
  • வங்கித் துறை சார்ந்த தகைமை (Qualification) பெற்றிருத்தல் மேலதிக நன்மையாகும்.
  • வயது 23 அல்லது அதற்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.
  • போட்டித்தன்மை கொண்ட சூழலில் இலக்குகளை அடைவதற்கான ஆர்வம் இருத்தல்.
  • சிறந்த தனிப்பட்ட திறன்கள் (Interpersonal skills) இருத்தல்.
  • ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் சிறந்த ஆளுமை.
  • கடமைகளை நிறைவேற்றுவதில் செயல்திறன் மற்றும் ஆக்கபூர்வமானவராக இருத்தல்.
  • வங்கி, நிதி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் முன் அனுபவம் இருப்பது மேலதிக நன்மையாகும்.

தகுதியான நபருக்கு SDB வங்கியுடன் வங்கித் துறையில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு கவர்ச்சிகரமான சம்பளப் பொதி, இதர சலுகைகள் மற்றும் விரிவான பயிற்சிகள் வழங்கப்படும்.