GCE AL Z-SCORE RELEASING DATE
க.பொ.த உயர் தரம் 2021 (2022) பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி, நாளை 02 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
க.பொ.த (உ/த) பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டு புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்தார்.
கடந்த வருடம் வெளியான மாவட்ட ரீதியான z score வெட்டுப்புள்ளிகளை பெற்றுக் கொள்ள இங்கு அழுத்தவும் – CLICK HERE
இதன்படி பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு இரண்டு மாதம் ஒரு வாரத்துக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விண்ணப்பம் கோரப்பட்டு மிக குறுகிய காலத்தில் வெளியிடப்படுவதாக அறிவிப்பு இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
க.பொ. த உயர் தர 2021(2022) பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 2,36,035 பேரும், தனியார் பரிட்சார்த்திகள் 36,647 பேருமென மொத்தம் 2,72,682 பேரும் தோற்றி இருந்தனர். இதில் 1,71,497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்தபட்ச தகுதிகளை பெற்றிருந்தனர்.
அவ்வாறு பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்தபட்ச தகுதியைப் பெற்றுக் கொண்டவர்களில்1,49,946 பேர் பாடசாலை மாணவர்களாவர்.இவர்களில் 21,551 தனியார் பரீட்சார்த்திகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பரீட்சை முடிவுகளின் படி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 42, 519 மாணவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது