VAT SYSTEM FOR PETROL AND LP GAS

VAT SYSTEM FOR PETROL AND LP GAS

ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா அறிவித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி முதல் பெறுமதி சேர் வரி 18 சதவீதம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி எரிபொருளுக்கான வரி 18 வீதத்திலிருந்து 7.5 சதவீதம் நீக்கப்பட்டு 10.5% மட்டுமே விதிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலைகள்

மேலும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு 2.5% நீக்கப்பட்ட நிலையில் எரிவாயுக்கான VAT விகிதம் 15.5% விதிக்கப்படவுள்ளது.

அதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 380.00 ரூபாய்க்கும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 468.00 ரூபாய்க்கும், டீசல் 361.00 ரூபாய்க்கும், சூப்பர் டீசல் 477.00 ரூபாய்க்கும், விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிடப்பட்ட எரிபொருள் விலைகள் அண்ணளவாக கணிக்கப்பட்டதுடன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.