HNB offering you a rewarding eleven-month internship programme at a branch/department of the Bank located close to your home.The eleven-month internship programme offered by HNB will enable you to learn key aspects of banking by interacting with our outstanding team of professionals.
உயர்தரம் முடித்துவிட்டு வங்கியில் அல்லது நிதி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்பவர் ஆக நீங்கள் இருந்தால் உங்களுக்கான சந்தர்ப்பம் இது..(இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இற்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்)
இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹட்டன் நேஷனல் வங்கியில் 11 மாதங்கள் சம்பளத்துடன் internship செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.. பாடசாலையிலிருந்து சமீபகாலங்களில் விடுபட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு இந்த internship programme முன்னெடுக்கப்படுகின்றது.
விண்ணப்பிக்க தேவையான தகைமைகள் என்ன?
உங்கள் வயது 18 தொடக்கம் 24 கிடைப்பதாக இருத்தல் வேண்டும்..
உயர்தரப் பரீட்சையில் தோற்றி இருக்க வேண்டும்.
சாதாரண தர பரீட்சையில் 5 திறமை சித்தி பெற்றிருக்க வேண்டும். (ஆங்கில பாடத்தில் திறமைச் சித்தி அவசியம்)
(11 மாதங்கள் என்பது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு சமமானது.. எனவே நீங்கள் ஒரு வருடம் ஒரு வங்கியில் intetnship செய்திருப்பது உங்கள் எதிர்காலத்தில் சிறந்த வங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமையும்.. வங்கிகளில் intern செய்துவிட்டு தொடர்ச்சியாக அதே வங்கியில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொண்டவர்களும் உள்ளனர்).. எனவே சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.
குறிப்பு – நீங்கள் HNB இன் banking associate trainee பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதற்காண விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது ..விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யுங்கள் – APPLY
(உயர்தரத்தில் ஒரு ஒரு திறமை சித்தி மற்றும் இரண்டு சாதாரன சித்தி அவசியம்.)
இதற்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க முடியாது.. விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை ஒவ்வொரு படிமுறையாக கீழே புகைப்படங்களுடன் கொடுத்துள்ளோம்.. அதனை முழுமையாக வாசித்து விட்டு அதன்படி விண்ணப்பியுங்கள்..
முக்கிய குறிப்பு- விண்ணப்பிக்கும் போது முடிந்தவரை கணினியை பயன்படுத்தி விண்ணப்பிக்க முயற்சி செய்யுங்கள்..
விண்ணப்பிக்கும் லிங்க் – APPLY
விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றவுடன் கீழே உள்ளவாறு ஒரு திரை உங்களுக்கு தோன்றும்.. இதில் login to apply என கொடுக்கப்பட்டுள்ளது. அதை முதலில் கிளிக் செய்யவும்..
click செய்த பின் உங்களுக்கு login செய்வதற்கான திரை தோன்றும்.login செய்ய முன்னர் முதலில் register செய்ய வேண்டும் ..register செய்தால் தான் உங்களுக்கான password உருவாக்க முடியும்..
மேலே உள்ள புகைப்படத்தில் கீழ் பகுதியில் உள்ள REGISTER என்பதை கிளிக் செய்து கேட்கப்படும் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யுங்கள்..(கொடுக்கப்படும் பாஸ்வேர்டை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்)
Register செய்த பின் மீண்டும் login திரை தோன்றும்
குறித்த திரையில் உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை மற்றும் ஏற்கனவே கொடுத்த password என்பவற்றை கொடுத்து உள்நுழையவும்..
உள் நுழைந்த பின் உங்களது சுயவிபரங்கள் (பெயர், முகவரி,)மற்றும் கல்வித் தகைமைகள் தொடர்பான விபரங்கள் கேட்கப்படும்..
(உங்களுடைய முகம் நன்றாக தெரியக்கூடிய வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அப்லோட் செய்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.)
கீழே உங்கள் மொழி அறிவு தொடர்பான தகைமை கேட்கப்பட்டிருக்கும்..அதில் மூன்று மொழிகளிலும் உங்கள் புலமைத்துவ ம் பற்றிய சரியான தெரிவுகளை கொடுக்கவும்.
செய்தபின் இன்னும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு save and continue கொடுத்து அடுத்த பக்கத்தைப் உள்நுழையவும்.. அடுத்த பக்கத்தில் நீங்கள் உயர் தரத்திற்கு மேலதிகமாக ஏதேனும் டிப்ளோமா அல்லது certificate அல்லது degree. செய்திருந்தால் அது தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.. அவற்றை நிரப்பவும்.. விவரங்களைப் பூர்த்தி செய்தவுடன் add என்பதை கிளிக் செய்யவும்..(ஒன்றுக்கு மேற்பட்ட தகைமைகள் இருப்பின் ஒவ்வொன்றாக புதிதாக நிரப்பி மீண்டும் மீண்டும் add செய்யவும்.)
அடுத்ததாக கல்விக்கு மேலதிகமாக நீங்கள் விளையாட்டுகளில் அல்லது ஏதேனும் அழகியல் கலைகளில் அல்லது உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏதும் போட்டிகளில் பங்குபற்றி இருந்தால் அது தொடர்பான விபரங்களை பூர்த்தி செய்து add செய்து கொள்ளவும்..
அடுத்ததாக உங்கள் உறவினர் அல்லாத இரண்டு பரிந்துரை யாளர்களின் விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.. உயர் பதவிகளில் உள்ள யாரேனும் இருவரை பெயர், தொழில் மற்றும் அவர்களது தொடர்பு விபரங்கள் போன்றவற்றை கொடுத்து add செய்து கொள்ளவும்..
அடுத்ததாக இதற்கு முன்னர் நீங்கள் ஏதேனும் நிறுவனத்தில் அல்லது வங்கியில் வேலை செய்திருந்தால் அது தொடர்பான விபரம் கேட்கப்பட்டிருக்கும். (குறித்த விபரங்கள் இருப்பின் add செய்த பின்னர்..).
Save and continue என்பதை கொடுக்கவும்.
save கொடுத்த பின்னர் உங்கள் தகவல்கள் அனைத்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கான ஒரு திரை தோன்றும்.. குறித்த திரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று காணப்படும்…