சாதாரண தொலைபேசியில் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படும் – MINISTRY OF EDUCATION

தற்போது நாட்டில் நிலவுகின்ற  தொற்று நிலமை காரணமாக சரியான கல்வியை பெற்றுக் கொள்வது மாணவர்களுக்கு ஒரு கடினமான விடயமாக மாறியுள்ளது..

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலைக் கல்வி என்பது கேள்விக்குறியான ஒரு விடயமாக மாறியுள்ளது.. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்படியாவது கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்மார்ட்போன் ஊடாக வாட்ஸ்அப் மற்றும் zoom தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை வழங்க முயற்சி செய்கின்றனர்..

எனினும் கல்வி அமைச்சினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில் இணையம் ஊடாக வழங்கப்படுகின்ற கல்வி 50 வீதமான மாணவர்களை சென்றடைய வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

சரியான ஸ்மார்ட் போன் வசதி இல்லாமை, இணைய வசதி இல்லாமை, இணையம் ஊடான கல்வியில் ஆர்வம் இன்மை காரணங்களினால் மாணவர்கள் இணைய கல்வியை பெற்றுக் கொள்வது கடினமான விடயமாக மாறியுள்ளது..

எனவே ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவர்கள் சாதாரண தொலைபேசியை பயன்படுத்தி 1377 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்வதன் மூலம் இலவசமாக கல்வியை பெற்றுக் கொள்ள முடியும்.. இந்த தொலைபேசி அழைப்புக்கு எந்த விதமான கட்டணங்களும் அறவிடப்படும் மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது..1377 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உங்கள் மொழியை தெரிவு  செய்து பாடங்களை கற்க முடியும்..

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தமது கல்வி சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்..

இந்த சேவை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..

இந்த தகவலை எல்லா பாடசாலை மாணவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..