Applications For Grade 5 Scholarship Examination 2024

Applications For Grade 5 Scholarship Examination 2024

பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் உதவிப்பணம் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தப்படும் பரீட்சை -2024


மேற்படி பரீட்சை 2024 செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமையை இத்தால் அறியத்தருகின்றேன். இதற்கான விண்ணப்பப்படிவங்கள் 2024 மே மாதம் 27 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை நிகழ்நிலை (Online) முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 2024 ஜூன் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் நிகழ்நிலை முறைமை மூடப்படும். எக்காரணத்திற்காகவேனும் விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்பதை கவனத்திற் கொள்ளவும்.


நரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரசாங்கப் பாடசாலையொன்றில் அல்லது அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே தோற்ற முடியும்.