Arunalu sittham childrens art competition 2025-COMMERCIAL BANK

Arunalu sittham childrens art competition 2025-COMMERCIAL BANK

அருணலு சித்திரம் 2025

அருணலு சித்திரம் 2025

கொமர்ஷல் வங்கியின் ஓவியப் போட்டி

போட்டியின் நோக்கம்

இலங்கையின் திறமையான சிறுவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கி கௌரவிப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை சிறுவர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

மொத்தமாக ரூ. 4.8 மில்லியன் பெறுமதியான பரிசுகள்!

வயதுப் பிரிவுகள் மற்றும் கருப்பொருள்கள்

பிரிவு வயது எல்லை பிறந்த வருடம் கருப்பொருள் கடதாசியின் அளவு
முன் ஆரம்பப் பள்ளி 04 – 05 2020/2021 விரும்பிய தலைப்பு A3
ஆரம்பப் பள்ளி 06 – 07 2018/2019 விரும்பிய தலைப்பு A3
பின் ஆரம்பப் பள்ளி 08 – 10 2015/2016/2017 வகுப்பறை A3
கனிஷ்ட பிரிவு 11 – 13 2012/2013/2014 சினிமா 14″ x 18″
சிரேஷ்ட பிரிவு 14 – 16 2009/2010/2011 எனது கனவு 14″ x 18″

பரிசுகளும் சான்றிதழ்களும்

தேசிய மட்டம் (அனைத்துப் பிரிவுகளுக்கும்)

  • முதலாம் இடம்: ரூ. 100,000
  • இரண்டாம் இடம்: ரூ. 75,000
  • மூன்றாம் இடம்: ரூ. 50,000

மாகாண மட்டம் (அனைத்துப் பிரிவுகளுக்கும்)

  • முதலாம் இடம்: ரூ. 25,000
  • இரண்டாம் இடம்: ரூ. 15,000
  • மூன்றாம் இடம்: ரூ. 10,000
  • 4 ஆம் இடம் தொடக்கம் 10 ஆம் இடம் வரை தகுதிக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாவட்ட மற்றும் வெளிநாட்டுப் பிரிவுகள்

  • மாவட்ட மட்டம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக எண்ணிக்கையிலான படைப்புகளைச் சமர்ப்பிக்கும் பாடசாலைக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு.
  • வெளிநாட்டுப் பிரிவு: அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெறும் ஒருவருக்கு ரூ. 50,000 பணப்பரிசு மற்றும் சான்றிதழ்.

விண்ணப்பிக்கும் முறை

  • உங்கள் ஓவியத்தை www.arunalusiththam.lk என்ற இணையத்தளத்தில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • ஓவியம் JPEG வடிவத்தில் 5MB அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தின் போது போட்டியாளரின் முழுப் பெயர், பிறந்த திகதி, முகவரி, பாடசாலை, பெற்றோர்/பாதுகாவலர் விபரம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்கள் வழங்கப்பட வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள்

  • ஒருவர் ஒரு சித்திரத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
  • சமர்ப்பிக்கப்படும் ஓவியம் போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
  • வெற்றி பெறும் அல்லது இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் ஓவியங்களின் மூலப் பிரதிகள் கோரப்படும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • போட்டிக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஓவியங்களின் உரிமையும் கொமர்ஷல் வங்கிக்கு உரியதாகும்.
  • நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


கீழே உள்ள சமர்ப்பியுங்கள் என்ற லிங்கை அழுத்தி உங்களால் ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்..