BLOG IT AND WIN PRICE COMPETITION 2022-UNION ASSURANCE

BLOG IT AND WIN PRICE COMPETITION 2022-UNION ASSURANCE

செப்டம்பர் என்பது ஆயுள் காப்பீட்டு விழிப்புணர்வு மாதமாகும்
‘ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம்’ பற்றி பேசலாம். UNION ASSURANCE வலைப்பதிவு (BLOG) போட்டியில் கலந்து கொண்டு ரூ. 180,000 மதிப்புள்ள பரிசுகளை வென்றிடுங்கள்! நீங்கள் விரும்பும் மொழியில் கட்டுரை, கதை அல்லது கவிதையை ஒன்றினை எழுதி பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் படைப்பாற்றல் மற்றும் நீங்கள் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்கள் உங்களை வெற்றிபெறச் செய்யும்!
எனவே இப்போதே வலைப்பதிவு (BLOG) செய்யுங்கள்

போட்டி பிரிவு மற்றும் வயது எல்லைகள்

குறித்த போட்டிக்கு எந்த விதமான வயததெல்லையும் கிடையாது…யாரும் பங்குபற்றி வெல்ல முடியும்.

நீங்கள் விரும்பிய மொழியில் உங்கள் கவிதை அல்லது கட்டுரை அல்லது கதை வடிவில் எழுதி அனுப்ப முடியும்..

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்

குறித்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 180 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை வெல்ல முடியும்.மேலும் உங்கள் ஆக்கம் union assurance வலைப்பதிவு பக்கம் ,சமூக வலைத்தள பக்கங்களில் பிரசுரிக்கப்படும்.

தலைப்பு – ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம்

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

  • 1. கதை அல்லது கட்டுரை குறைந்தபட்சம் 800 வார்த்தைகளாகவும் அதிகபட்சம் 1,500 வார்த்தைகளுக்குள்ளும் இருத்தல் வேண்டும் (கவிதைகளுக்கு வார்த்தை எண்ணிக்கை பொருந்தாது).
  • 2. சமர்ப்பிக்கப்பட்ட கதை, கட்டுரை அல்லது கவிதை உங்களது சொந்த படைப்பாக இருக்க வேண்டும். பிற தளங்களில் (டிஜிட்டல் அல்லது வேறு) இருந்து நகலெடுக்கப்பட்டதாக இருக்கக்கூடாது.
  • 3. சமர்ப்பிக்கப்பட்ட வலைப்பதிவுகள் ஒரு சுயாதீனமான கல்வி நிபுணரால் மதிப்பாய்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வலைப்பதிவுகளுக்கு வெகுமதியளிக்கப்படுவதுடன் அவை யூனியன் அஷ்யூரன்ஸ் இணையத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும்.
  • 4. வலைப்பதிவைச் சமர்ப்பிப்பதன் மூலம், யூனியன் அஷ்யூரன்ஸிற்கு நீங்கள் பின்வரும் ஒப்புதல்களை வழங்குகின்றீர்கள்;
  • a. நிறுவனத்தின் உள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, உள்ளடக்கத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான ஒப்புதல்.
  • b. யூனியன் அஷ்யூரன்ஸ் இணையதளத்தில் வலைப்பதிவை வெளியிடுவதுடன் விளம்பரங்களில் பயன்படுத்துவதற்கான ஒப்புதல்.
  • 5. பதிவுகள் 25 செப்டம்பர் 2022 அன்று நிறைவடையும்.

நீங்கள் அனுப்ப விரும்பும் ஆக்கத்தை உதாரணமாக கட்டுரையாக இருந்தால் அதனை typing செய்து கொள்ளுங்கள்.. குறித்த கட்டுரையை word document வடிவில் அல்லது pdf வடிவில் மாற்றி கொள்ளுங்கள்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள register என்ற லிங்கில் நுழைந்து உங்கள் விபரங்களை நிரப்பி ஆக்கங்களை upload செய்து submit என்பதை கிளிக் செய்யவும்..