BOC Little Picasso 2024 competition

BOC Little Picasso 2024 competition

DOWNLOAD APPLICATION

 இலங்கை வங்கியின் 85 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நடத்தப்படும் குட்டிப் பிக்காசோ சித்திரப்போட்டி

இலங்கை வங்கியில் கணக்கொன்றை வைத்திருக்கும் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

‘குட்டிப் பிக்காசோ’ நாடு தழுவிய சித்திரப் போட்டி, 2 ½ வயது முதல் க.பொ.த. உயர் தரம் வரையிலான முன்பள்ளி / பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்காக நடத்தப்படுவதுடன் விண்ணப்பதாரிகள் தமக்கு விருப்பமான தலைப்பில் ஓவியங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

போட்டி வகை பின்வருமாறு அமையும்

குழு மற்றும் வகுப்புவயதுக் குழு
I.முன்பள்ளிவயது 2 ½ இலிருந்து 5 வரை
II.1 மற்றும் 2 ஆம் வகுப்புவயது 6 இலிருந்து 7 வரை
III.3 இலிருந்து 5 ஆம் வகுப்புவயது 8 இலிருந்து 10 வரை
IV.6 இலிருந்து 9 ஆம் வகுப்புவயது 11 இலிருந்து 14 வரை
V.10 இலிருந்து 13 வகுப்புவயது 15 முதல் 19 வரை
VI.ஆசிரியர்கள்வயது எல்லை இல்லை

(சர்வதேசஃதனியார் பாடசாலை பிள்ளைகள் வயதிற்கேற்ப பொருந்தக்கூடிய வயதுக்குழுவை தெரிவுசெய்துகொள்ள வேண்டும்)

ஆசிரியர் பிரிவு: தேசிய மட்டம்

முதலாம் இடம்ரூ. 150,000/- உடன் பதக்கம் மற்றும் சான்றிதழ்
இரண்டாம் இடம்ரூ. 125,000/- உடன் பதக்கம் மற்றும் சான்றிதழ்
மூன்றாம் இடம்ரூ. 100,000/- உடன் பதக்கம் மற்றும் சான்றிதழ்
திறமைப் பரிசுகள் 05ரூ.50,000/- உடன் சான்றிதழ்

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் : 

வெற்றியாளர்களுக்கு மட்டுன்றி அவர்களுடைய பாடசாலைகளுக்கும் பரிசுகளை வழங்க நாம் தயாராக உள்ளோம்.

 மாணவர் பிரிவு: தேசிய மற்றும் மாகாண மட்டம்மாகாண மட்டத்தில் பரிசுகள்
இடம்தேசிய மட்ட பரிசுகள் வெற்றியாளரின் பாடசாலைக்காக தேசிய மட்டத்தில் பரிசுகள்
முதலாவதுரூ.100,000/- உடன் பதக்கம், சான்றிதழொன்று மற்றும் வேறு பரிசுகள்ரூ.25,000/- (இலங்கை வங்கி பாடசாலை மன்றமொன்று இருப்பின் ரூ..35,000/-)ரூ.25,000/- உடன் சான்றிதழொன்று, வெற்றியாளரின் பாடசாலைக்கு ரூ.12,500/- (இலங்கை வங்கி பாடசாலை மன்றமொன்று இருப்பின் ரூ.22,500/-)
இரண்டாவதுரூ.75,000/- உடன் பதக்கம், சான்றிதழொன்று மற்றும் வேறு பரிசுகள்ரூ.15,000/-(இலங்கை வங்கி பாடசாலை மன்றமொன்று இருப்பின் ரூ.25,000/-)ரூ.15,000/- உடன் சான்றிதழொன்று
மூன்றாவதுரூ.50,000/- உடன் பதக்கம், சான்றிதழொன்று மற்றும் வேறு பரிசுகள்ரூ.10,000/- (இலங்கை வங்கி பாடசாலை மன்றமொன்று இருப்பின் ரூ.20,000/-)ரூ.10,000/- உடன் சான்றிதழொன்று
திறமைப் பரிசுகள் 10ரூ.10,000/- உடன் சான்றிதழொன்று.பொருந்தாதுரூ.5,000/- உடன் சான்றிதழொன்று

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • ஒருவர் ஒரு சித்திரத்தை மட்டுமே இப்போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும்
  • ஓவியத்திற்கு 18″×14″ அளவிலான வெள்ளைக் கடதாசியை பயன்படுத்தவேண்டும். (6ஆம் வகுப்பு முதல் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரை)
    10 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு தேவையாயின் A3 (அகலம் 17″ x உயரம் 11″) அளவிலான கடதாசியைப் பயன்படுத்தலாம்.
  • எந்தவொரு நிறம்தீட்டும் முறையையும் (பெஸ்டல்/நீர்ச்சாயம்/போஸ்டர் சாயம் அல்லது பொருத்தமான முறையை) பயன்படுத்தலாம்.
  • ஓவியத்தைச் சுற்றி போடர் போடக்கூடாது.
  • நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முறையாக பூர்த்தி செய்து, அதன் பின்புறத்தில் ஓவியம் கழறாதவாறு ஒட்டவேண்டும். ஓவியத்தைச் சுருட்டுவது அல்லது மடித்தல் கூடாது .
  • தீர்ப்பு மற்றும் போட்டி நிபந்தனைகள் பற்றிய இறுதி முடிவு இலங்கை வங்கிக்கு உரித்தானது.
  • வெற்றியாளர் பெயர், வயதை உறுதி செய்வதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதிகள்:

  • இலங்கை வங்கியில் எவ் வகையான கணக்கையும் வைத்திருக்கும் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் (முன்பள்ளி/பாடசாலை) போட்டியில் கலந்துகொள்ளலாம்.
  • இலங்கை வங்கியில் கணக்கொன்று இல்லாவிடின், ஆக்கங்களை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் புதிய கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

சித்திரங்களை ஏற்றுக்கொள்ளுதல் 2024 ஆகஸ்ட் 09 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை இடம்பெறும். மேலதிக விபரங்களை அருகிலுள்ள இலங்கை வங்கிக் கிளையில் அல்லது இல. 1975 இன் ஊடாக இலங்கை வங்கியின் அழைப்பு நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.