FREE ADVANCED LEVEL CLASSES FOR COMMERCE AND ARTS STUDENTS
விருட்சம் “சகலருக்கும் தரமான கல்வி” என்ற நோக்கோடு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஒன்றிணைந்த, திறமை வாய்ந்த, பல்கலைக்கழக மட்டத்தில் சாதித்த வளவாளர் குழாத்தினைக் கொண்டிருக்கும் கல்வியகமாகும். புவிசார் மற்றும் பொருளாதார காரணிகளால் கல்வியில் ஏற்படக்கூடிய தடைகளை நீக்கி இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சேவை புரிகின்ற நோக்கத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது.
இலவசக் கல்விக்கான நன்றிக் கடனாக விருட்சத்தினை இலாப நோக்கற்ற கல்வியகமாக நிறுவியிருக்கிறோம். அதனடிப்படையில் தற்போது க.பொ.த உயர் தர கலை, வர்த்தக பிரிவுகளைச் சேர்ந்த பொருளியல், கணக்கீடு, அரசியல் விஞ்ஞானம், புவியியல், இந்து நாகரிகம், தமிழ், வரலாறு, இஸ்லாமிய நாகரிகம் போன்ற பாடங்களைத் தேர்வு செய்த (2023/2024) மாணவர்களுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பதிவுகளை மேற்கொள்ள உங்களது பெயர், வகுப்பு, பாடசாலை, நகரம், பாடம்/ பாடங்கள், தொலைபேசி இலக்கம் என்பவற்றை கீழ்காணும் Whatsapp இலக்கத்திற்கு அனுப்புங்கள்.
