Future Sri Lanka Art Competition Terms and Conditions

Future Sri Lanka Art Competition Terms and Conditions

HNB சிங்கிதி – எதிர்கால இலங்கை சித்திரப் போட்டிக்கான விதிகளும் நிபந்தனைகளும் – 1 ஒக்டோபர் 2022

HNB சிங்கிதி – எதிர்கால இலங்கை சித்திரப் போட்டி தொடர்பான நியதிகளும் நிபந்தனைகளும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

1. தகைமைகள்:
  • 4 முதல் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்காக மாத்திரம் இப் போட்டி நடாத்தப்படும்
  • அனைத்து சித்திரங்கள் / ஓவியங்களும் போட்டியின் கருப்பொருளான “எதிர்கால இலங்கை” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக அமைதல் வேண்டும்.
  • வரைதல் அல்லது நிறம் தீட்டுதல் பிள்ளையின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். கணினியில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அனைத்து ஓவியங்களும் கைகளினால் வரையப்படல் அல்லது நிறம் தீட்டப்படல் வேண்டும்.
2. போட்டிக்கான கால எல்லை

சித்திரங்களை online மூலமாக 2022 ஒக்டோபர் 1 முதல் 31 வரை சமர்ப்பிக்க முடியும். அனைத்து பதிவுகளும் 2022 ஒக்டோபர் 31 பி.ப 11:59 மணிக்கு முன்னர் online ஊடாக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

3. போட்டி விதிகள்
  • போட்டியில் பங்கேற்பதன் மூலம், பங்கேற்பாளர் இந்த விதிகளுக்கு முழுமையாக நிபந்தனையின்றி கட்டுப்பட சம்மதிக்கிறார் என்பதுடன் பங்கேற்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவரால் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளார் என்பதாக உத்தரவாதம் அளிக்கின்றார். மேலும் நீங்கள் HNB இன் முடிவுகள் இறுதியானது மற்றும் அதன் உள்ளடக்கத்துடன் தொடர்புடையது என ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • சரிபார்ப்பு நோக்கங்களுக்காக போட்டி முடியும் வரை உண்மையான சித்திரம் / ஓவியத்தை பங்கேற்பாளர் தன் வசம் வைத்திருத்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு பிள்ளையிடம் இருந்தும் தலா ஒரு சித்திரம் / ஓவியம் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுடன் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்படின் 1 ஆவது பதிவு கருத்தில் கொள்ளப்படும்.
4. எவ்வாறு பங்குபற்ற முடியும்?
  • போட்டியில் நுழைவதற்கு.

பின்வரும் கட்டாய விவரங்களுடன் தொடர்புடைய வயதுப் பிரிவின் கீழ் சித்திரம் வரைவதற்கான / சித்திரத்தின் புகைப்படம் ஒன்றை ஒரு கருத்துரையாக (comment) மூலம் சமர்ப்பிக்கவும்.

  • பிள்ளையின் பெயர்:
  • வயது:
சமர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதித் திகதி : 2022 ஒக்டோபர் 31 ஆம் திகதி பிற்பகல் 11:59.
சித்திரம் / ஓவியங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணைப்புகள் (links) கீழே தரப்பட்டுள்ளன

4 முதல் 7 வரை அறிவிப்புக்களை வெளியிடுதல் : Link

8 முதல் 12 வரை அறிவிப்புக்களை வெளியிடுதல்: Link

13 முதல் 16 வரை அறிவிப்புக்களை வெளியிடுதல்: Link

5. சித்திரம் தொடர்பான விவரக்குறிப்புக்கள்

கருப்பொருள்: எதிர்கால இலங்கை

கடதாசியின் அளவு: A4 மாத்திரம்

தாள்: வெள்ளைத் தாள்.

நிறங்கள்: பெஸ்டல் (Pastel), சுவரொட்டி வர்;ணங்கள் (Poster colours)> நீர் வர்;ணங்கள் (water colours).

6. பரிசுகள்

அனைத்து வயதுப் பிரிவுகள் தொடர்பிலும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கான வெற்றியாளர்களைத் தெரிவு செய்தல் வங்கியால் நியமிக்கப்பட்ட நடுவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படும்.

10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு பிரிவின் கீழும் முகநூல்; தளத்தில் அதிக எண்ணிக்கையிலான விருப்பங்களுடன் ஒவ்வொரு வயது பிரிவிலிருந்தும் மிகவும் பிரபலமான 5 சமர்ப்பிப்புக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

ஒவ்வொரு பரிசின் பெறுமதியும் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது: ஒவ்வொரு வயதுப் பிரிவுக்காகவும்
பரிசுத் தொகைHNB சிங்கிதி கணக்கு வைத்திருப்பவர்களின் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும். (நிபந்தனைகளை சரிபார்க்கவும்)
முதலாம் இடம்ரூபா. 25,000/-ரூபா.50,000/-
இரண்டாம் இடம்ரூபா. 20,000/-ரூபா.40,000/-
மூன்றாம் இடம்ரூபா. 15,000/-ரூபா.30,000/-
10 ஆறுதல் பரிசுகள்ரூபா.2,500/-ரூபா.5,000/-
மிகவும் பிரபலமான 5 சித்திரங்கள்இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

2022 ஒக்டோபர் 01 முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் HNB சிங்கிதி சேமிப்புக் கணக்கொன்றை பிள்ளை வைத்திருந்து புதிய குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூபா 1000/= வைப்பில் இடப்படுமாயின், பரிசளிப்புத் தொகை மேலே குறிப்பிட்டுள்ளவாறு இரட்டிப்பாக்கப்படும்.

மிகவும் பிரபலமான சித்திரம் / ஓவியத்துக்காக வழங்கப்படும் 15 பரிசுகளுக்கு இது ஏற்புடையதாகாது.

மிகவும் பிரபலமான சித்திரம் / ஓவியம் பொருத்தமான வயது பிரிவின் கீழ் ஒரு கருத்துரையாக (comment) பதிவேற்றப்பட்ட பங்கேற்பாளரின் சித்திரங்களின் அதிக எண்ணிக்கையிலான விருப்பங்களின் (likes) அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இது leaderboard பதாகையில் காட்சிப்படுத்தப்படும் Link

வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முகநூல் கருத்துப் பதில் அல்லது முகநூல்;