IMPORTANT NOTICE ABOUT GCE OL 2022(2023)-DEPARTEMNT OF EXAMINATION

IMPORTANT NOTICE ABOUT GCE OL 2022(2023)-DEPARTEMNT OF EXAMINATION

பரீட்சை நிலையத்துக்கு மாணவர்கள் வரும்பொழுது அவர்களின் அனுமதி அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கொண்டு வரப்படுவது முக்கியமானதாகும்..

பரீட்சைக்கு தேவையான எழுதும் உபகரணங்கள் தவிர்ந்து மேலதிகமாக வேறு ஏதும் பொருட்களைக் கொண்டு வருதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.. இலத்திரனியல் உபகரணங்கள் ஆன ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கடிகாரம் என்பவற்றை பரீட்சை நிலையத்துக்குள் கொண்டுவரமுடியாது..

இந்த வருடம் முதல் தமிழ் இலக்கிய நயம், ஆங்கில இலக்கிய நயம் மற்றும் அரபு இலக்கிய நயம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாளில் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன..புதிய கட்டமைப்பு உடைய வினாத்தாள் மாதிரி வடிவத்தை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது அதனை பெற்றுக்கொள்ள இந்த லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும் – –DOWNLOAD PAPERS STRUCTURE

பரீட்சையின் போது கணித்தல் பொறி அதாவது கால்குலேட்டர் மற்றும் அழிமை ( correcting fluid) என்பவற்றை பயன்படுத்த முடியாது.. பரீட்சை மண்டபங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொள்ளுதல், மாணவர்களுக்கு இடையூறு விளைவித்தல், விடைகளை பகிர்ந்து கொள்ளுதல் என்பவை பரீட்சையின் சட்ட விதிகளுக்கு எதிரானவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்

இதுவரை படிக்காத புதிய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முயல்வதை இந்த நேரத்தில் செய்யக் கூடாது என மனநல மருத்துவர்கள் மாணவர்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச, ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு அமைதியான உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

வீட்டைச் சுற்றி நடத்தல், மெல்லிசை பாடல்களை கேட்டல் மற்றும் சில நிமிடங்களுக்கு ஒரு குறுகிய மத நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற அமைதியான பயிற்சியை செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பேனா பென்சில்களை வாங்குவதை விட, பயன்படுத்திய கைக்கடிகாரம், பேனா, பென்சில் ஆகியவற்றை தயாராக வைத்திருப்பது நல்லது என அவர் தெரிவித்துள்ளார்

பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 1911 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112784208, 0112784537, 0112785922, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

GCE OL அனுமதி அட்டைகளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்CLICK HERE

பரீட்சை நேர சுசி அட்டவணையை பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும் CLICK HERE