NEW EDUCATION REFORM 2023-MINISTRY OF EDUCATION
NEW UPDATE(13.05.2023)
கல்வி சீர்திருத்தம் நிறுத்தப்படுகிறது
கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்ததன் காரணமாக இவ்வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி சீர்திருத்தங்களை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது
.பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக மொடியுல் முறையை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சுதிட்டமிட்டிருந்தது. அதன் முன்னோடி திட்டமாக நூற்றி எட்டு பாடசாலைகள்
தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த பாடசாலைகளின் தரம் 1, தரம் 6, தரம் 10 மாணவர்களுக்கு அந்தந்த பாடங்கள் தொடர்பான மொடியுல் தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த்து.
இலங்கையில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட விருந்த கல்வி சீர்திருத்தம் தற்போதைக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.. குறித்த கல்வி சீர்திருத்தத்தில் உள்ளடங்கி இருந்த விடயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
2023, 2024 ஆம் வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதியகல்வி சீருத்தம்
2023 இலங்கையின் ஒட்டுமொத்த கல்வி முறையும் முற்றாக மாற்றப்படுவதற்கான அடித்தளம் போடும் ஆண்டாக கல்வி அமைச்சால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
2023/24 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள பொதுக் கல்வி மறுசீரமைப்புக்கு அமைய மூன்று தவணைகளும் மூன்று செமஸ்டராக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தரம் 6-11 வரை
உள்ள மாணவர்களுக்கு வழமையாக நடைமுறைப்படுத்தப்படும் மூன்று தவணைகள் என்பதற்கு பதிலாக மூன்று செமஸ்டர்களாக கல்வி நடைமுறை உருவாக்கப்பட உள்ளது..
ஒரு செமஸ்டர் 14 வாரங்களைக் கொண்டதாக இருக்கும்..
ஒரு செமஸ்டர் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 346 மணித்தியாலங்கள் கற்கைகளுக்கான காலமாக ஒதுக்கப்பட்டிருக்கும்.
2023ஆம் ஆண்டு முதல் சாதாரண தரப் பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்குவதோடு, 8ஆம் தரத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடமாக அறிமுகப்படுத்தப்படும்
தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் வேலை வாய்ப்புகளைத் தேடுவது அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடினமான பணியாக இருக்கும்
கணிணி அறிவின்றி 2023 இல் ஆசிரியர்கள் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட முடியாது.
1.பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நீக்கம்..அதற்குப் பதில் இதழ்வடிவ முறை (மொடியுல்)
2.முன்பள்ளி, தரம் 1,6,10 பூரண கலைத்திட்ட மாற்றம் 2023
3.பாடவேளைகள் 1 மணித்தியாலம் ஒரு நாள் 5 பாடவேளை மிகுதி உடற்கல்வி செயற்பாடுகள்
4.பாடசாலை தவனண முறை நீக்கம்… semister முறை அறிமுகம் 1 semister 12-14 வாரங்கள்
5.கற்றல் பேறு நீக்கம்… விருப்புக்குரிய நோக்கம் அறிமுகம்
6.கலவை கற்பித்தல் முறை அறிமுகம்
1.நேரடியாக கற்றல்
2.ICT கற்றல்( zoom, YouTube)
7.மொடியுல் தீம் அடிப்படையில் உருவாக்கம்
8.தரம் -9 இல் தேசிய பொது பரீட்சை அறிமுகம்
9.இடைநிலை பிரிவு மாற்றம்….. சிரேஷ்ட இடைநிலை தரம் 12-13, கனிஷ்ட இடைநிலை 6-11
10. தேசிய கல்வி குறிக்கோள் 6
11.பொது பரீட்சையில் எழுத்து பரீட்சைக்கு 60% புள்ளிகள் மிகுதி 40% செய்முறை அனைத்து பாடங்களுக்கும்
12. புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் mindset மாற்றம் தொடர்பான செயலமர்வுகள் 2021 இல் ஆரம்பம்…. இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி.
13.PTS பாடம் நீக்கம்
14.மீத்திறன் கூடிய மாணவர்கள் உரிய மொடியுல்களை குறிப்பிட்ட காலத்திற்கு முன் பூர்த்தி செய்து வகுப்பேற்றம் பெறலாம்..
அனைத்து வகுப்பறையிலும் மடிக்கணிணி மூலமே கற்றல் இடம்பெறும் 2023 தரம் 1,6,10 வகுப்பறைகள் மாற்றத்திற்குள்ளாகும்.