OFFICIAL DATES ANNOUNCED FOR SCHOLARSHIP &ALEVEL 2022
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது