OFFICIAL DATES ANNOUNCED FOR SCHOLARSHIP ,ALEVEL,OLEVEL 2021
பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு.
▪️2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான பரீட்சைத் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
▪️இதன்படி , தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது 2022 ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
▪️2022 பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் மார்ச் 5ஆம் திகதி வரை உயர்தர தர பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
▪️மேலும் ,க.பொ.தர சாதாரண தர பரீட்சையானது 2022 மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது