REVISED NUMBER OF LESSONS ENGAGED IN SCHOOLS 2022
பாடசாலையில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டிய பாட வேலைகளின் எண்ணிக்கை மற்றும் நேரம் தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது..
உதவி அதிபர்கள் 40 நிமிடம் கொண்ட 12 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபடவேண்டும்
பிரதி அதிபர்கள் 40 நிமிடம் கொண்ட 10 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் .
ICT ஆசிரியர்கள் கணிணி ஆய்வுகூட வசதியில்லாத ஆசிரியர்களை 15 பாடவேளைகள் விடுவித்து கணிணி மூலம் நிறைவேற்றக்கூடிய பணிகளில் ஈடுபடுத்தலாம் .
ஆலோசனைப் பணிக்கான ஆசிரியர்கள் 300 மாணவர்களுக்கு மேற்படின் முழுமையாக ஆலோசனைப் பணியில் ஈடுபடுத்த முடியும்
300 மாணவர்களுக்குக் குறைவாயின் 15 பாடவேளைகள் விடுவித்து செயற்படுத்தலாம் .
சமயப்பாட ஆசிரியர்கள் வாரத்திற்கு 30 பாடவேளைக்குக் குறைவாக இருப்பின் ஆசிரியர்களின் இயலுமைக்கு ஏற்ப வேறு பாடங்கள் / வேறுபணிகளை ஒப்படைக்கலாம் .
நூலகப் பாடசாலையாயின் நூலக நடவடிக்கைகளுக்காக ஒருவரை வழங்க வேண்டும் .
உயர்தர வகுப்பிற்கு பிரதான பாடத்தைக் | கற்பிக்கும் ஆசிரியர் வாரத்தில் ஆகக்குறைந்தது 30 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபடவேண்டும்
வகுப்பாசிரியர்கள் வாரத்தில் ஆகக்குறைந்தது 33 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் .
மேற்பார்வை ஆசிரியர்கள் 1000 மாணவர்களுக்கு மேற்படின் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியும் . மேற்பார்வையாளர்கள் 16 பாடவேளைகளில் கற்பித்தலில் ஈடுபட்வேண்டும் . மேற்பார்வை ஆசிரியர்கள் வருடாந்த மேற்பார்வைத்திட்டத்தை தயாரித்து அதிபரிடம் அனுமதி பெறவேண்டும் .
கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செயற்பாட்டு விடுப்புகளைத் தவிர்த்து குறைந்தபட்சம் 30 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபட வேண்டும் . எஞ்சிய பாடவேளைகளில் கற்பித்தலுடன் தொடர்புடைய செயற்பாடுகளிலும் அதிபரால் பணிக்கப்படும் பணிகளிலும் ஈடுபட வேண்டும் .
பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பொருளாளராகப் பணிபுரியும் ஆசிரியரை அப்பணிக்காக 10 பாடவேளைகள் விடுவிக்க முடியும் .
30 பாடவேளைகளுக்குக் குறைவான கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் விளையாட்டு , அழகியல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்று அதற்கான வருடாந்த திட்டத்தைத் தயாரித்து அதிபரிடம் அனுமதி பெற்று செயற்படுத்த வேண்டும் .