Sabaragamuwa university calling applications for Aptitude exam of physical education and B.sc sport sciences and management education degree programmes.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020 2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு 2 கற்கை நெறிகளுக்கான உளச்சார்பு பரீட்சை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறித்த கற்கை நெறிகள் கீழ்வருமாறு..
1.விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவத்தில் கௌரவப் பட்டம்
2.உடற்கல்வி கௌரவப் பட்டம்
விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவத்தில் கௌரவ பட்டம் மற்றும் உடற்கல்வி கௌரவ பட்டம்விண்ணப்பிக்க உள்ளவர்கள் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உளச்சார்பு பரீட்சை விண்ணப்பித்தால் போதுமானது.
உடற்கல்வி கௌரவ பட்டத்துக்கு மாத்திரம் விண்ணப்பிக்க விரும்புகின்ற விண்ணப்பதாரர்கள் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் அல்லது இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உளச்சார்பு பரீட்சை விண்ணப்பித்தல் வேண்டும்.
விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவத்தில் கௌரவ பட்டத்திற்கு மாத்திரம் விண்ணப்பிக்க உள்ளவர்கள் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் அல்லது ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் அல்லது களனி பல்கலைக்கழகத்தின் உளச்சார்பு பரிசோதனைக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.
நாட்டில் நிலவும் கோவிட் நிலைமை காரணமாக குறித்த பரீட்சையை சபரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பன ஒன்றாக கூட்டிணைந்து ஆன்லைன் மூலமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிரப்புவதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கை வங்கியின் ஏதாவது ஒரு கிளையின் மூலமாக இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பெயருக்கு
0002246976
என்ற கணக்கில் 1000 ரூபாவை செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டை ஸ்கேன் செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜூன் 10 2021 ஆகும்.
உளச்சார்பு பரீட்சை தொடர்பாக வெளியான விளம்பர அறிவித்தல்கள் மூன்று மொழியிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதற்கான வழிகாட்டி PDF உம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.